கடந்த 17ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா மதுரையில் நடந்தது, அடுத்த நாள் 18ஆம் தேதி மதுரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடும் நடைபெற்றது, இந்த இரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் திமுக தலைவர் முக ஸ்டாலின், இந்த நிகழ்வின் போது கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என திமுக திட்டவட்டமாக தெரிவித்ததை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு முடிந்ததும், மக்கள் வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தனியாக ஆலோசனை நடத்தியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு முதல் நாளே வந்த எ.வ.வேலு மதுரை மாவட்ட திமுக அரசியல் குறித்து ஆய்வு செய்துள்ளார், மதுரை மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்திய எ.வ.வேலு மதுரையில் யாருக்கு சீட் வழங்கப்படும் என்பதை உறுதி செய்த்தவர், அவர்களிடம் தைரியமாக தேர்தல் பணியை தொடங்குகள் உங்களுக்கு தான் சீட் என நம்பிக்கை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து மதுரையில் இரண்டு நாட்கள் தங்கிய எ.வ.வேலு 18ஆம் தேதி கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோரை மாநாடு தொடங்கும் அன்று காலை மதுரையில் தனி தனியாக சந்தித்த எ.வ.வேலு வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை சீட் வழங்கப்படும் என ஸ்டாலின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்று இடங்கள், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுக்கு இரண்டு சீட்டுகள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் மூன்று சீட்டுகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் மூன்று சீட்டுகள் தான் என எ.வ,வேலு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அன்று மாலை நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஸ்டாலின் மாநாடு முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே சென்று விட்டார், இதனால் கூட்டணி கட்சி தலைவர்கள் முக ஸ்டாலினை சந்தித்து பேச முடியாமல் போனது.
இந்நிலையில் மாநாடு முடிந்ததும் வைகோ, திருமாவளவன் ,மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர், இதில் தனி தனியாக திமுக உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச வேண்டாம், அனைவரும் ஒன்றாக இணைந்து பேச்சு நடத்தினால் தான், ஒவ்வொரு கட்சிக்கும் தலா 8 முதல் 10 சீட் வரை கிடைக்கும், 2 சீட் 3 சீட் பெற்று கொண்டு போட்டியிடுவதற்கு கடந்த 2016 தேர்தல் போன்று மக்கள் நல கூட்டணி போன்று காங்கிரஸ் ,கமல்ஹாசன் ஆகியோரை ஒன்றிணைத்து மூன்றாவது அணி அமைத்து போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .