தேர்தலுக்கு பின் முக அழகிரிக்கு திமுகவில் முக்கிய பதவி.! முக அழகிரி அமைதிக்கு பின்னணி காரணம் இது தான்.!

0
Follow on Google News

2011 அம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக அழகிரி, அதன் பின்பு கருணாநிதி மறைவு வரை அமைதியாக இருந்து வந்தார், கருணாநிதி மறைவுக்கு பின் மீண்டும் திமுகவில் தன்னை இணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் முக அழகிரி, ஆனால் முக ஸ்டாலின் அதற்கு உடன்படவில்லை, இறுதியில் கட்சியில் தனக்கு இடமில்லை என்றாலும் பரவாயில்லை முரசொலி அறக்கட்டளையில் தனது மகன் துரை தயாநிதியை இயக்குனராக நியமிக்க கேட்டு கொண்டார்.

இதற்கு முக ஸ்டாலின் உடன்படவில்லை, இதனை தொடர்ந்து சென்னையில் தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை திரட்டி மிகப்பெரிய பேரணியை நடத்தினர், இந்த பேரணி முக ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடும் விதத்தில் இருந்தது. இதன் பின்பு தொடர்ந்து அமைதியாக இருந்த முக அழகிரி விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல் பரவியது, மேலும் ரஜினிகாந்த் தொடங்கும் புதிய கட்சியில் இணைய இருப்பதாக கூட செய்திகள் வெளியானது.

ஆனால் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் மதுரையில் தனது ஆதரவாளர்களை திரட்டி மிக பிரமாண்ட கூட்டத்தில் பேசிய முக அழகிரி, விரைவில் தனது நிலைப்பாடு என்ன என்பதை பற்றி அறிவிக்க இருப்பதாகவும், அது என்ன முடிவாகவும் இருக்கலாம், அதை நீங்கள் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும் என தெரிவித்திருந்தார், மேலும் இந்த கூட்டத்தில், முக ஸ்டாலினை முக கடுமையாக தாக்கி பேசியிருந்தார் முக அழகிரி.

இந்நிலையில் தொடர்ந்து 8 வருடங்களாக அரசியலில் இருந்து முக அழகிரி ஓரம் கட்டப்பட்டிருந்தாலும், அவர் அழைப்பை ஏற்று மதுரையில் நடந்த கூட்டத்துக்கு வந்த அவரது ஆதரவாளர்களின் கூட்டத்தை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளானார் முக ஸ்டாலின், இதனை தொடர்ந்து வரும் சட்டசபை தேர்தலில் முக அழகிரி எடுக்கும் முடிவு தென்மாவட்டத்தில் திமுகவுக்கு மிக பெரிய சரிவை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த முக ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் மூலம் முக அழகிரியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதில் தேர்தல் முடித்ததும் திமுகவில் முக்கிய பதவி வழங்கப்படும் என கூறப்பட்டதாக தெரிகிறது, அல்லது ஏற்கனவே முக அழகிரி வகித்து வந்த தென் மண்டல செயலாளர் பதவி வழங்கப்பட்டு தென்மாவட்ட திமுகவை அவர் வசம் ஒப்படைத்து விடுவதாக உறுதியளித்த பின்பு தான் முக அழகிரி இந்த சட்டசபை தேர்தலில் முக ஸ்டாலினுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.