கர்நாடக மாநிலம், உத்தர் கர்நாடக என்கிற மாவட்டத்தில் உள்ளது சித்தபுரா என்னும் பகுதி, இந்த பகுதி அடர்ந்த காட்டு பகுதியாகும், இங்கே வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக காட்டு பகுதியில் காபி கொட்டை, அண்ணாச்சி பழம், பலா பழம், போன்றவை இங்கே உற்பத்தியாகும் விவசாய பொருட்களில் முக்கிய பொருட்களாக இருந்து வருகிறது, அதிக நீர்விழ்ச்சி அடங்கிய இந்த பகுதி எப்போது குளிச்சியாக காட்சி தரக்கூடியது.
அடர்ந்த காட்டு பகுதி என்பதால் இங்கே யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக இருந்து வருகிறது, இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் யானை ஓன்று உள்ளே விழுந்துள்ளது, நீண்ட நேரமாக பள்ளத்தில் விழுந்த யானை வெளியில் வருவதற்கு போராடியுள்ளது, அனால் அந்த யானையால் பள்ளத்தில் இருந்து மீண்டு வெளியில் வரவில்லை, வெளிய வருவதற்கு முயற்சித்த அந்த யானை சத்தமிட்டு கொண்டே மேலே வருவதற்கு முயற்சித்துள்ளது.
இதனை பார்த்தவர்கள், உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், உடனே அந்த இடத்துக்கு ஜேசிபி வாகனத்தை வரவழைத்து, பள்ளத்தில் விழுந்த யானை மேலே வருவதற்கு எதுவாக பாதை அமைத்து ஏற்பாடு செய்தனர், ஜேசிபி வாகனம் அமைத்து கொடுத்த பாதை வழியாக மேலே ஏறுவதற்கு கடுமையாக முயன்று மெல்ல மெல்ல மேலே ஏற தொடங்கியது அந்த யானை.
இதனை தொடந்து அந்த யானை மேலே ஏற முயன்ற போது மீண்டும் கீழே விழாமல் இருக்க ஜேசிபி ஓட்டுநர் சதுர்த்தியமாக யானை பின் புறமாக இருந்து ஜேசிபி வாகனத்தின் மூலம் முன்னோக்கி தள்ளினார், சற்று அழுத்தமாக தள்ளினார் யானைக்கு படுகாயம் ஏற்படும் என்பதால், யானையின் வேகத்துக்கே பின்னோக்கி தள்ளினார், இதனால் கடும் போராட்டத்துக்கு பின் பள்ளத்தில் விழுந்த யானை சிறு காயங்கள் கூட இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மீண்டு வந்த யானை அங்கிருந்து புறப்பட்டு செல்லாமல் ஜேசிபி வாகனத்தை நோக்கி தனது தும்பிக்கையை தூக்கி தன்னை பாதுகாப்பாக மீட்டதற்கு நன்றி சொன்ன செயல் அங்கே இருந்தவர்களை ஆரவாரம் செய்யத் தூண்டியது, இதன் பின் பட்டாசுகளை வெடிக்க செய்து பள்ளத்தில் விழுந்த யானையை வனப்பகுதிக்குள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்ட இந்த வீடியோவை கான கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.