இணைவி மனைவி துணைவினு வாழ்ந்தவரோட கட்சிகாரனுக்கு எப்படி தெரியும்.!ஆ.ராஜாவை வெளுத்து வாங்கிய நடிகை விந்தியா.!

0
Follow on Google News

சமீபத்தில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தேவையற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தன் மீது தெரிவிப்பதாக கூறினார், மேலும் மிகப்பெரிய ஊழல் 2ஜி என்றும், தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு பெரியது ரூ.1.76 ஆயிரம் அளவில் கொள்ளையடித்த கட்சி திமுக. இவர்கள் தற்போது அதிமுக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

முதல்வர் பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, செய்தியாளர்களிடம் பேசுகையில் ஊழல் குற்றச்சாட்டில் திமுகவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை, 2ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இருக்குமென்றால் கோட்டையில் எல்லா ஊடகங்கள் முன்னிலையில் விவாதிக்க முதல்வர் தயாரா.? மேலும் ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன என்பதை விவாதிக்க தயாரா.? என்று ஆ.ராசா இரு தினகளுக்கு முன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா நான் சவால் விட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது இன்னும் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து பதில் வரவில்லை, உங்களுக்கு அசிங்கமா இல்லையா.? உங்காத்தா ஊழல் செய்து ஜெயிலுக்கு போனவர் என்று சொன்னேன், அரசியல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி, அப்படிப்பட்ட ஆத்தா படத்தையே தூக்கி கொண்டிருக்கிறாயே அப்படியானால் ஆத்தா மாதிரி ஊழல் செய்வேன் என்று அர்த்தமா என ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசினார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருமையிலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அநாகரிகமாக கொச்சையான வார்த்தைகளில் ஆ.ராசா பேசியது அதிமுகவினர் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து ஆ.ராசாவுக்கு பதிலளிக்க வகையில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நடிகை விந்திய இது குறித்து கூறுகையில், சாமிய கூட ஆத்தானு சொல்லிதான் பழக்கம்,

நாங்க எங்க ஆத்தாவின் படத்தையும் கொள்கையும் தூக்கிட்டுதான் சுத்தறோம், ஆனா உங்களைமாறி உங்க தாத்தாவின் பொணத்த தூக்கிட்டு பொதைக்க வழி இல்லாம அலையலை. இணைவி மனைவி துணைவினு வாழ்ந்தவரோட கட்சிகாரனுக்கு ஆத்தான்ற வார்த்தைக்கு மதிப்பு எப்படி தெரியும் என சரமாரியாக ஆ.ராசாவை வெளுத்து வாங்கியுள்ளார் விந்தியா.