ஓவர் அட்டூழியம் செய்த நயன்தாரா… மஞ்சு வாரியார் கொடுத்த பதிலடி… நயன்தாராவுக்கு இந்த அசிங்கம் தேவையா.?

0
Follow on Google News

சமீப காலமாகவே திரும்பும் திசை எல்லாம் நயன்தாராவும், அவர் குறித்த சர்ச்சைகளும் தான் அதிக அளவு பேசு பொருளாகியுள்ளது. முதலில் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் போது சக குடியிருப்பு வாசிகள், நயன்தாராவை கழுவி கழுவி ஊற்றியதில் தொடங்கி, தற்போது செம்பருத்தி டீயை குடிங்கள் என ரசிகர்களை தூண்டிவிட்டு மருத்துவர்களிடம் வாங்கி கட்டியது வரை என பல சர்ச்சைகளில் சிக்கினார்.

இந்நிலையில் தான் தற்போது இவரின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் ரசிகர்கள் அதிரடியாக பறித்து, மலையாள நடிகையான ஒருவருக்கு வழங்கியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை நயன்தாரா எப்போது பல படங்களில் வெற்றியடைந்து, ரசிகர்களிடம் இருந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றாரோ, அப்போதிருந்தே தனது சம்பளத்தை பல கோடியாக உயர்த்தினார்.

ஆனால் தற்போது பத்து முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்கும் இவர், தன்னுடன் சூட்டிங் ஸ்பாட்டிற்கு, அவருக்கும், அவர் குழந்தைகளுக்கும், ஆயாவாக வரும் நபர்களுக்கும் சேர்த்து சம்பளம் வாங்கி அட்டூழியம் செய்து வருகிறார். அதேபோல் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு 10 கோடி வாங்கும் நயன்தாரா, கே ஜி எஃப் பட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகும் ஒரு படத்திற்கு, அவரின் சகோதரியாக நடிப்பதற்கே 20 கோடி கேட்டும் அட்டூழியம் செய்திருக்கிறார்.

அதேபோல் அவரை ஏதாவது பட பிரமோஷனுக்கு அழைத்தால் கூட அவர் வர மறுத்துவிடுகிறார். அதற்கும் அவர் பணம் கேட்கிறார் என டைரக்டர்களும் குமுறுகின்றனர். இந்நிலையில் தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட, நயன்தாரா அளவிற்கு ஆட்டிட்யூட் காட்ட மாட்டார். ஆனால் நயன்தாராவின் ஆட்டிட்யூட் அதிக அளவில் இருக்கிறது என பலரும் அவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தான், தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என தற்பெருமை பேசி சீன் போட்டுக் கொண்டு சுத்திய நயன்தாராவிடம் இருந்த அந்த பட்டத்தை பறித்து, தற்போது ரசிகர்கள் அதனை மஞ்சு வாரியருக்கு அளித்துள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர், தனது கணவரான நடிகர் திலீப்பை பிரிந்த பிறகு, முன்பை விட அதிக படங்களில் நடித்த வருகிறார்.

அதுவும் தனது ரீ என்ட்ரியால், தமிழில், அசுரன், துணிவு ஆகிய படங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இந்நிலையில் தான் தமிழில் நயன்தாராவை, லேடி சூப்பர் ஸ்டார் என்று மீடியாக்கள் சில முதலில் குறிப்பிட்டு எழுதியதால், அதுவே அவருக்கு பட்டமாகி விட்டது. அந்தப் பட்டத்தை கைநழுவ விடாமல் பிடித்து வைத்துக் கொண்ட நயன்தாரா, தனது படங்களின் டைட்டில் மற்றும் விளம்பரங்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடும்படி அவரே கூறி வந்திருக்கிறார்.

இந்நிலையில் இதே போன்று சமீப காலமாக மலையாள மீடியாக்கள் மஞ்சு வாரியரை லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடத் தொடங்கி உள்ளனர். இதுகுறித்து தனது வருதத்தை தெரிவித்த மஞ்சு வாரியார், என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்கின்றனர், அந்த வார்த்தையைக் கேட்கும்போது தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன், என்னை இப்படி அழைப்பதால், சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பட்டம் எனக்கு தேவையில்லை. கடைசி வரைக்கும் எனது ரசிகர்களின் அன்பு மட்டுமே போதுமானது என்று கூறியுள்ளார்.

இப்படி மஞ்சு வாரியர் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என கூற வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தாலும், மறுபக்கம் நடிகை நயன்தாரா தன்னை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று தான் சொல்ல வேண்டும் என சொல்வதால், உண்மையான லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியார் தான் என்று ரசிகர்கள் கூறி, நயன்தாராவின் திமிருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.