தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக உச்சத்தில் இருந்தவர் நடிகர் வடிவேலு, படத்தின் கதாநாயகனிடம் கால் சீட் வாங்குவதற்கு முன் நகைசுவை நடிகர் வடிவேலுவிடம் கால் சீட் வாங்கிட்டு வாங்க என இயக்குனர்களிடம் தயாரிப்பாளர்கள் வலியுறுத்திய காலம் அது, அந்த அளவுக்கு நடிகர் வடிவேலு பிசியாக வலம் வந்தார், ஆனால் 2011 சட்டசபை தேர்தலுக்கு பின்பு உச்சத்தில் இருந்த வடிவேலு தமிழ் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் சென்றுவிட்டார்.
நடிகர் விஜயகாந்த் அவர்களை கீழ்த்தரமாக பேசிய வடிவேலுவை தாக்கிய விஜயகாந்த் ரசிகர்கள், வடிவேலு வீட்டை கல் வீசி தாக்குதல் நடத்தினர், அதில் இருந்து விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து வந்த வடிவேலு, 2011 சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிடுவேன் என சவால் விடுத்தார்,இந்த பிரச்சனை தொடக்கத்திலே வடிவேலுவின் நெருக்கிய சினிமா துறையை சேர்ந்தவர்கள் வடிவேல் செய்வது சரியில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் பணம், புகழ் என உச்சத்தில் இருந்த வடிவேலு காது கொடுத்து கேட்கவில்லை, இதனை தொடர்ந்து அதிமுக உடன் 2011 தேர்தலில் விஜயகாந்த் கூட்டணி அமைத்தவுடன், வடிவேலுவை பயன்படுத்த திட்டமிட்டார் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, இது குறித்து சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவர் கூறுகையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விஜயகாந்தை எதிர்த்தும் திமுகவை ஆதரித்தும் வடிவேலு பிரச்சாரம் செய்ய 5 கோடி கருணாநிதி கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து திமுகவின் தூண்டுதல் தனியாக இருந்த வடிவேலுவுக்கு மேலும் ஊக்கம் கொடுக்க, தேர்தல் பிரச்சார மேடைகளில் விஜயகாந்தை அநாகரிகமாக பேசி வந்தார், ஆனால் தேர்தல் முடிவுகள் திமுக எதிர் கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் போனது, அதிமுக ஆட்சி அமைந்தது, எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் அமர்ந்தார், தமிழ் சினிமாவில் வடிவேலுவை வைத்து படம் எடுக்க யாரும் முன் வரவில்லை பின் அவர் நடித்த ஒரு சில படங்கள் தோல்வியை தழுவ ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமா வடிவேலுவை புறக்கணித்தது.
அடுத்த 2016 சட்டசபை தேர்தலில் பழம் நழுவி பாலில் விழும் என விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்தார் கருணாநிதி, இதன் பின்பு திமுக மேடைகளில் விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து கருணாநிதி மற்றும் திமுகவினரை மகிழ்வித்த வடிவேலு நிலைமை மேலும் பரிதாபத்துக்கு சென்றது. தற்போது தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் வடிவேலு, புகழ் உச்சியில் இருந்த போது ஆணவத்துடன் விஜயகாந்தை எதிர்த்து, கருணாநிதி கொடுத்த 5 கோடிக்கு மேலே கூவி இன்று சினிமாவில் இருந்து புறக்கணிக்க பட்டு சினிமா வாழ்க்கையை இழந்து சில இடங்களில் மனம்விட்டு கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்கிறது சினிமா வட்டாரம்.