நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, 2012ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் பாபா படம் வெளியான போது, அந்த படம் வெளியான திரையரங்குகள் வட தமிழகத்தில் பாமக தொண்டர்களால் சூறையாட பட்டது, திரையரங்குகளில் இருந்து பாபா சுருள் பெட்டியை கடத்தி சென்றனர், திரையரங்குகளில் திரைகள் கிழிக்கப்பட்டது, இதனால் பல திரையரங்குகளில் பாபா படம் நிறுத்தப்பட்டது.
இதனால் பெரும் நட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து, நட்டம் அடைந்த திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தகர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தார் ரஜினிகாந்த். திமுக ஆட்சியில் இந்த சம்பவம் நடந்த போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது பாமக. அப்போது காவல்த்துறை பாமக மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் அளவுக்கு பலமாக இருந்தது பாமக. மேலும் ராமதாஸ் மதுரை வந்த போது கருப்பு கொடி காட்டிய ரஜினி ரசிகர்கள் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் கூட அரங்கேறியது.
இப்படி ஒரு காலத்தில் பலமாக இருந்து மிக பெரிய அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்த பாமக, தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த ரஜினிகாந்தை அலறவிட்ட பாமக இன்று ஜெய்பீம் படத்தில் சர்ச்சை கூறிய சில காட்சிகள் உள்ளதாக எழுந்த சர்ச்சையில், நடிகர் சூர்யாவிடம் மண்ணை கவ்விய சம்பவம் தமிழக அரசியலில் மிக பெரிய அவமானத்தை பாமகவுக்கு பெற்று தந்துள்ளது.
பாமக தரப்பில் இருந்து பல்வேறு மிரட்டல்கள் வந்தால் கூட எதார்க்கு துணிந்தவன் என்கிற போர்வையில் நடிகர் சூர்யா, பாமகவின் சலசலப்புகளை புறந்தள்ளிவிட்டு அடுத்த படத்தின் வேலையில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார், மேலும் பாபா படத்துக்கு மிக பெரிய நட்டத்தை ஏற்படுத்திய பாமகவினர் ஜெய்பீம் படத்தை கடுமையாக எதிர்த்ததின் காரணமாக அது அந்த படத்துக்கு மிக பெரிய விளம்பரத்தை பெற்று தந்து படம் வியாபார ரீதியில் மிக பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக பாமக தங்கள் கோட்டை என தம்பட்டம் அடித்து வரும் வடமாவட்டங்களில் வலுவிழந்து வருவது குறிப்பிடதக்கது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் மண்ணை கவ்வியது, அதன் பின்பு நடந்த சட்ட சபை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் பாமக மண்ணை கவ்வியது தற்போது நடிகர் சூர்யாவிடம் பாமகவினர் மண்ணை கவ்வியுள்ளது, பாமக தனது பலத்தை இழந்துள்ளதை எடுத்துரைப்பதாக கூறப்படுவது குறிப்பிடதக்கது.