பொழுதை கடத்தும் சித்தார்த்..ஆனால் நமக்கு நேரமின்றி நிவாரண பணிகள்.! பாஜக ஐடி பிரிவு தலைவர் பதிலடி.!

0
Follow on Google News

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த், மிக பெரிய இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முதல் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு, அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடித்தார், எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத வாய்ப்பாக தொடக்கத்திலே பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் இவர் நடித்த இரண்டு படங்களும் படுதோல்வியை தழுவியதை தொடர்ந்து, சித்தார்த் ராசி இல்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்டு தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலையை காட்டும் சித்தார்த் மற்ற நேரங்களில் அரசியல் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி கொள்வார், இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ இல்லை தலைவரோ யாராக இருந்தாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எதிராக டிவீட்டரில் பதிவு செய்திருந்தார்.

சித்தார்த் இந்த கருத்துக்கு தமிழக பாஜக சார்பில் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் கொடுக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் தமிழக பாஜக ஐடி பிரிவினர் தனது தொலைபேசி என்னை கசியவிட்டு, கடந்த 24 மணி நேரத்தில், எனக்கும் எனது குடுப்பதினாருக்கும் 500க்கு மேற்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் பாலியல் ரீதியான மிரட்டல்கள் வந்துள்ளதாக சித்தார்த் தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து பாஜக ஐடி பிரிவு குறித்து நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர் CTR நிர்மல் குமார் தனது டிவீட்டர் பக்கத்தில்.

இந்தப் பெருந்தொற்று நேரத்தில் நாம் அனைவரும் ஒரு முகத்தோடு அனைவருக்கும் உதவி செய்து உணவு மற்றும் மருந்துப் பொருள் கிடைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றோம், அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நாம் சொல்லிக் கொள்வது என்னவென்றால் பொழுதை கடத்தும் நடிகர் சித்தார்த் போன்று தனிமனிதரின் செயலுக்கு நீங்கள் யாரும் பதில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கேட்டுக் கொள்கிறோம்.. இந்தப் பெருந்தொற்று நேரத்தில் நாமும் பாதுகாப்பாக இருந்து தேவைப்படும் மக்களுக்கு உதவிகளை செய்வதே காலச் சிறந்தது என பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளார்.