நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்தும், அவர் அரசியல் கட்சி தொடங்கப்படவில்லை என்பது குறித்து ரஜினிகாந்த் பெயரில் ஒரு அறிக்கை ஓன்று சமூக ஊடகத்தில் கடந்த சில நாட்களாக வைரலாகி வந்தது, இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த அறிக்கை பற்றி ரஜினிகாந்த் தனது டிவீட்டர் பக்கத்தில், அந்த அறிக்கையில் உள்ள தனது உடல் நலம் குறித்து வந்த தகவல் உண்மை, ஆனால் அது என்னுடைய அறிக்கை கிடையாது என தெரிவித்தவர், இது குறித்து தகுந்த நேரத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து போயஸ் கார்டன் வட்டாரத்தில் விசாரித்ததில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை கை விட்டுள்ளதாக தெரிகிறது, ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கியதும் அவருடைய முதல்வர் வேட்பாளர் என பரபரப்பாக செய்திகளில் கூறப்பட்டு வந்த அண்ணாமலை IPS, அவர்களிடம் தனது உடல்நலம் குறித்து விளக்கம் கொடுத்து, இந்த கொரானா காலத்தில் புதிய அரசியல் கட்சி சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அண்ணாமலை IPS அவர்களிடம் பாஜகவில் இணையே ரஜினிகாந்த் வழியனுப்பி வைத்து நீங்க போங்க அங்க, நம்ம வாய்ஸ் பாஜகவுக்கு தான் என தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்து வந்த நடிகை குஷ்பு புதியதாக ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியில் இணைவதற்காக காத்திருந்துள்ளார், ஆனால் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து குஷ்புவிடம் ரஜினிகாந்த் எடுத்து கூற அதற்கு குஷ்பு பாஜகவில் இணைவது குறித்து ரஜினிகாந்திடம் கேட்ட போது, சரியான முடிவு என வாழ்த்து கூறி பாஜகவுக்கு அனுப்பி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் இரு தினகளுக்கு முன் சென்னையில் உள்ள ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகி ஒருவரை போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்த ரஜினிகாந்த், சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் தனது பெயரில் உள்ள அறிக்கையை அவரிடம் கொடுத்து வாசிக்க சொன்னவர், இதில் உள்ள தகவல் அனைத்தும் உண்மை, விரைவில் இது குறித்து மக்கள் மத்தியில் எனது நிலைப்பாட்டை தெரிவிக்கின்றேன் என தெரிவித்துள்ளார், இந்நிலையில் ரஜனிகாந்த் புதிய கட்சி தொடங்க சத்திய கூறுகள் இல்லை என தகவல்கள் உறுதி படுத்தப்பட்டுள்ளது,
மேலும் அவர் பாஜகவில் இணைய இருப்பதாக வரும் செய்தியும் உண்மை இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1996 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்தது போன்று,2021 தேர்தலில் பாஜகவுக்கு தனது ஆதரவை மட்டும் தெரிவிப்பார் என எதிர்பார்க்க படுகிறது, மேலும் 1996 தேர்தலின் போது திரும்ப ஜெயலலிதாவுக்கு வாக்கு அளித்தால் இனி அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என ரஜினியின் வாய்ஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, அதே போன்று திமுகவுக்கு எதிராக வரும் தேர்தலில் வாய்ஸ் கொடுப்பார் என போயஸ் கார்டன் வட்டாரங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.