40 சீட் 120 கோடி வரை பேரம்.! ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன்-உதயநிதி சந்திப்பின் போது நடந்தது என்ன.?

0
Follow on Google News

கடந்த டிசம்பர் 10ம் தேதி ஆழ்வார்பேட்டையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளது தற்போது உறுதி படுத்தப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது, கடந்த டிசம்பர் 11ம் தேதி நமது தினசேவல் இணையதள செய்தியில், காங்கிரசை வெளியேற்றிவிட்டு கமல்ஹாசனை கூட்டணியில் இணைக்க திமுக திட்டம்.! கமல்ஹாசன் உடன் பேரம் தொடங்கியதா.? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

நமக்கு வந்த தகவலின் படி காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டு கமல்ஹாசன் உடன் கூட்டணி பேரத்தை தொடங்கியுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியை உறுதி படுத்தும் விதத்தில் நமது தினசேவல் இணையதளத்தில் செய்தி வெளியிடுவதற்கு முந்தைய நாள் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி இடையே சந்திப்பு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது, இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்கு முன்பு மூன்று முறை கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதயநிதி கூட்டணி குறித்து பேசியதாக தகவல் தெரிவிக்கின்றன, இந்நிலையில் டிசம்பர் 10ம் தேதி இரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு முக்கிய இடத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி இடையே நடந்த சந்திப்பில் 40 தொகுதி வரை கமல்ஹாசன் கேட்டதாக கூறப்படுகிறது, மேலும் தேர்தல் செலவுக்காக தொகுதிக்கு தலா 3 கோடி விகிதம் 40 தொகுதிக்கு 120 கோடி வரை உதயநிதியிடம் கமல்ஹாசன் பேரம் நடத்தியதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை இறுதியில் கமல்ஹாசன் கோரிக்கையை திமுக தலைமையிடம் கொண்டுசெல்வதாக உதயநிதி உறுதியளித்து சென்றுள்ளார், இதன் பின் தமிழகம் முழுவதும் சுற்று பயணத்தை மேற்கொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார், இதில் திமுகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற செய்தியாளர் கேள்விக்கு, இதை பற்றி பேசுவதற்கு உகந்த தருணம் இது கிடையாது என கமல்ஹாசன் மழுப்பலாக பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 4% சதவிகிதம் வரை வாக்கு வாங்கிய கமல்ஹாசனை கூட்டணியில் இணைந்துவிட்டு காங்கிரஸ் கட்சியை கழட்டிவிடும் முடிவில் திமுக உறுதியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை எதிர்கொள்ள கமல்ஹாசனை கூட்டணியில் இணைக்கவேண்டிய கட்டாயத்துக்கு திமுக தள்ளப்பட்டுள்ளதால் திமுக கூட்டணியில் கமல்ஹாசனை இணைக்க பெரும் முயற்ச்சியை திமுக மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது.