தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறுமென மதுரையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதியில் மட்டுமின்றி, அனைத்து தொகுதிகளிலும் நான் பிரச்சாரம் மேற்கொள்வேன். நிச்சயமாக வரும் தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆவார்.
தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் சுற்று பயணம் மேற்கொள்கிறார். லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு தருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்தனை ஆண்டு காலம் தூங்கி விட்டு தற்போது அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு வருகிறார். தமிழகத்திற்கு வர வேண்டிய எந்த திட்டமும் வரவில்லை. வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.
தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிபெறும். இந்த தேர்தலில் அ.தி.மு.க.வையும் பா.ஜ.வையும் தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதால், எத்தனை இடம் கொடுத்தாலும் போட்டியிட தயாராக இருக்கிறோம். புதிதாக எந்த கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு
இல்லை. எனது மகன் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார். கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டிய அவசியம் இப்போது இல்லை. முதியவர்களுக்கு தபால் வாக்கு வழங்குவது சரி என்பதே எனது கருத்து.
7 தமிழர் விடுதலை விவ காரம் என்பது மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து நடத்தும் கபட நாடகம். அ.தி.மு.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை நாசமாக்கியதை சொல்லி, மக்களிடம் இந்த தேர்தலில் வாக்கு கேட்போம் என வைகோ தெரிவித்துள்ளார், இந்நிலையில் வரும் தேர்தலில் திமுக எத்தனை தொகுதி கொடுத்தாலும் ஆட்சேபம் தெரிவிக்காமல் பெற்று கொண்டு கடுமையாக திமுக வெற்றிக்கு உழைக்க வேண்டும் என மதிமுக தொண்டர்களிடம் வைகோ பேசியதாக கூறப்படுகிறது.