சமீபத்தில் ‘அஜித்குமார் ரேஸிங் ‘என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி அஜித், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ஜனவரி 11 மற்றும் 12 ம் தேதிகளில் நடைபெறவுள்ள கார் பந்தய நிகழ்ச்சியில், நடிகர் அஜித் குமார் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் துபாயில் முகாமிட்டுள்ளார்
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கார் ரேஸிங்கில் அஜித் களமிறங்க உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன்படி அஜித் ஐரோப்பிய சீரிஸ் 992 g3 கப் பிரிவில் பங்கேற்பார் என தகவல் வெளியான நிலையில், அஜித்தின் அணிக்கான லோகோ ஆகியவை வெளியிடப்பட்டது. அஜித்தின் அணியில் மூன்று கார் ரேஸர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அஜித்தின் அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24 ஹெச், போஸே 92 ஜிடி3 ஆகிய கார் ரேஸ் பந்தயங்களில் பங்கேற்க உள்ளார் இதற்கான சோதனை ஓட்டம் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், நடிகர் அஜித் குமார் கார் பந்தய போட்டியின் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.
அஜித்தின் கார் ரேஸிங் டிராக்கின் மைய சுவரில் மோதியது. அஜித் இயக்கிய ரேஸ் கார் மிக வேகமாக தடுப்புகளில் மோதி, சில முறை சுழன்றபடி நிற்கிறது. காரின் முகப்புப் பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தது தெளிவாகத் தெரிகிறது. தடுப்பு சுவரில் மோதிய அஜித்தின் கார், அப்பளமாக நொறுங்கிய நிலையில் அஜித் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு காயமும் இல்லாமல் உயிர் தப்பி உள்ளார் விபத்தில் கார் சேதமடைந்த போதும் இந்த விபத்தில் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகர் அஜித், எவ்வித காயமும் இன்றி மீட்கப்பட்டார்.
அவர் சாதாரணமாக எழுந்து நடக்கும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.உலகம் முழுவதும் பைக்கில் வலம் வர வேண்டும் என்கிற, தன்னுடைய கனவை நிஜமாக்கி கொள்ள தொடர்ந்து போராடிவரும் அஜித், ஏற்கனவே கார் ரேஸில் கலந்து கொண்ட நிலையில், தற்போது பல வருடங்களுக்கு பின்னர் இந்த ஆண்டு மூன்று கார் ரேஸில் கலந்து கொள்ள அஜித் பயிற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித்குமார் புதிதாக ரேஸிங் நிறுவனம் தொடங்கியுள்ள நிலையில், அவருடைய அணி துபாயில் நடக்கின்ற கார் ரேசில் பங்கேற்க இருக்கிறது. இதற்கான கார் ரேஸ் பயிற்சி கடந்த 30 ஆம் தேதி முதல் துபாயில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய துணைக்கண்டத்தில் பல்வேறு நாடுகளி இந்த கார் ரேஸ் போட்டி நடைபெற இருக்கும் நிலையில்,
இதற்கான முதல் தொடர் போட்டி துபாயில் வரும் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் அஜித்குமார் புதியதாக தொடங்கியுள்ள கார் ரேஸ் நிறுவனம் சார்பில் அவருடைய அணி பங்கேற்க இருப்பதால், இதற்கான பயிற்சி துபாயில் நடந்து வந்தது, அந்த பயிற்சியில் பங்கேற்ற போது தான் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடதக்கது.
சமீபத்தில் அஜித் தனது குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சிங்கப்பூர் சென்று கொண்டாட்டத்தை முடித்துவிட்டு தனது குடும்பத்தினை இந்தியாவுக்கு அனுப்பி வைத்த அஜித் அங்கிருந்து சிங்கப்பூரிலிருந்து துபாய்க்கு சென்றார். அங்கு அவர் ரேஸிங் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு தனது சகாக்களுடன் சிறுவர்கள் ஓட்டும் பைக்கை ஓட்டும் வீடியோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்திய அடுத்த நாள் அஜித் கார் விபத்து அடைந்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.