மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீது சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கையா.?டெல்லியில் புகார்..

0
Follow on Google News

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மதுரை வருவதையொட்டி சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சமூகத்தை பொறுப்பில் இருந்து விடுவித்த மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் சமீபத்தில் மதுரை வந்த தேசிய தூய்மை பனி ஆணைய தலைவர் மா.வெங்கடேசனை அவமரியாதை செய்ததாக சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேசிய பட்டியல் சமூக ஆணையரிடம் தேசிய தூய்மை பனி ஆணையர் மா.வெங்கடேசன் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது. மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் என்னிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டது மட்டுமில்லாமல், என்னை அவமதிக்கும் நோக்கிலும், ஜாதிய வன்மத்துடன் நம் நடந்துகொண்டார் மேலும் அடிப்படையில் ஒரு மனிதனை மதிக்கும் பண்புடன் நடந்து கொள்ளாத அவரின் செயல்கள் கடனத்துக்குரிய வகையில் அமைந்தது. நான் கடந்த ஜூலை 11-ஆம் தேதி ஒரு சுகாதாரத் துறை ஆணையராக மதுரைக்கு பணியின் நிமித்தமாக சென்று இருந்தேன்.

சுகாதாரத்துறை பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி காயம் அடைந்ததை நேரில் சென்று நலம் விசாரித்து ஆய்வு செய்ய சென்றபோது மதுரை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பு மாநகராட்சி ஊழியர்கள் பலர் தங்களின் வேலையை நிரந்தரம் செய்ய போராட்டம் நடந்து வருவதை அறிந்தேன். அப்போது நான் மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது என் தொலைபேசி அழைப்பை புறக்கணிதும் என்னை சந்திக்க வராமல் தாமதம் செய்தார்.

சுகாதார பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்ததை ஆய்வு செய்ய வந்த என்னை அவமரியாதை செய்யும் நோக்கில் மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நடந்து கொண்டார். ஒரு மத்திய இணை அமைச்சர்க்கு இணையான அந்தஸ்தில் உள்ள நான் எனது அறைக்கு அழைத்தும் என்னை சந்திக்க மறுத்ததும் மிகவும் மரியாதை குறைவாகவும் நடந்துகொண்டது என்னுடன் பணி நிமித்தமாக எந்த ஒத்துழைப்பு வழங்காத அவருடைய செயல்கள் வருந்தத்தக்கது.

இதன் பின்பு மிகவும் தாமதமாக வந்த மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எனது அறையில் நுழைந்து என்னிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார். கருத்துக்கள் பரிமாற்றம் மற்றும் குறை தீர்க்கும் அந்த இடத்தில் இருந்து அவர் வெளிநடப்பு செய்தது மிகவும் மரியாதை குறைவாகவும் என்னை வருந்தத்தக்க வகையில் செயல்பட்டது என்னை வருத்தமடையச் செய்தது. ஒரு தேசிய பட்டியல் ஆணையரான என்னை மரியாதை குறைவாக அவர் நடத்தியது அவரது செயல் என்னை மிகவும் மன வருத்தத்திற்கு உள்ளாகியது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீது தன்னை அவமதித்த செயல்களுக்காக சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என தேசிய பட்டியல் சமூக ஆணையர் விஜய் சம்ப்லா அவர்களிடம் தேசிய தூய்மை பனி ஆணையர் மா.வெங்கடேசன் புகார் தெரிவித்துள்ளார்.