மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருவதையெட்டி, திமுக முன்னாள் மத்திய அமைச்சரும்,கருணாநிதி மகனுமான முக அழகிரி இன்று அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், கடைசி நேரத்தி இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, கருணாநிதி மறைவுக்கு பின் பாஜக-முக அழகிரி இடையே நடந்து வந்த நீண்ட நாள் பேச்சு வார்த்தை சமீபத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முக அழகிரியிடம் திரைமறைவில் தற்போது வரை தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது, இந்நிலையில் முக அழகிரி பாஜகவில் இணையும் பட்சத்தில் அவர்களும் முக அழகிரி உடன் பாஜகவில் இணைய தயராக இருக்கின்றனர், இந்நிலையில் பாஜகவுடன் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழகம் வரும் அமித்சாவை முக அழகிரி சந்திப்பதாக இருந்தது.
ஆனால் அழகிரி தரப்பில் தனது ஆதரவு எம்எல்ஏ கள் சில மாதம் அவகாசம் கேட்பதால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் 2021 சனவரி அல்லது பிப்ரவரி மாதம் தனது ஆதரவு திமுக எம்எல்ஏ, திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தென்மாவட்டத்தில் பிரமாண்ட மேடையில் பாஜகவில் இணைந்தால் தான் தனக்கு மரியாதை என தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து அமித்ஷா தரப்பில் இருந்து முக அழகிரி ஆதரவு முக்கிய திமுக புள்ளிகளின் பட்டியல் தரும்படி கேட்க, சற்று தாமதிக்காமல் அழகிரி தரப்பில் இருந்து பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அமித்ஷா தரப்பில் இருந்தும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதமே அழகிரி தனது ஆதரவாளர்களுடன் இணையும் விழாவை வைத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மேலும் சில ராஜதந்திர முடிவுகளின் படி தற்போது அமித்ஷா-முக அழகிரி சந்திப்பு உகந்தது கிடையாது என முடிவு செய்யப்பட்டு இருதரப்பில் இருந்தும் பேசி அமித்சா உடன் முக அழகிரி சந்திப்பு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.