சென்னையில் கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வடியாத நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை வியாசர்பாடியில் மழைநீரில் பழுதாகி மாநகரப் பேருந்து நின்றது, இடுப்பளவு மழை நீரிலிருந்து வெளியேற இயலாமல் பயணிகள் சிக்கி தவித்தனர். அதே ஜிஎஸ்டி ரோடு கூடுவாஞ்சேரி முழுவதும் வெள்ளம் சூழ்துள்ளது. பேருந்துகள் பயணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 500 தெருக்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள 75 இடங்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழை இடைவிடாமல் பெய்து வருவதால் தண்ணீரை வெளியேற்றுவது சிரமம் ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் இரவு பகலாக இந்த பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை தண்ணீரால் சூழ்ந்துள்ளது குறித்து பாஜக முக்கிய நிர்வாகி காயத்ரி ரகுராம் தெரிவித்ததாவது.
50 ஆண்டுகால மோசமான ஆட்சியினால் தமிழகம் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வடிகால் அமைப்பு சரியில்லை. கழிவுகள் கொட்டப்படுவதால் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. ஏரிகளை அழித்து அடுக்குமாடி குடியிருப்புகளை ஏரிகளின் மேல் கட்டி இது மழையின் போது அதிக சேதத்தை ஏற்படுத்தி நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்ல வழி இல்லாமல் இன்றைக்கு தமிழக மக்கள் அவதிப்படுகின்றனர்.
இது மிக பெரிய நிர்வாக சீர்கேடு, மக்கள் போராட ஆரம்பிக்க வேண்டும் உங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டும் அடுத்த தேர்தலுக்காக காத்திருக்க வேண்டாம். இப்போது இல்லை என்றால் ஒருபோதும் இல்லை. இது வாழ்நாள் முழுவதும் புறக்கணிக்கப்படும் அல்லது ஒவ்வொரு ஆண்டும் இந்த சிக்கலை எதிர்கொள்வோம். நாம் அனைவரும் இப்போது குரல் கொடுத்து போராட வேண்டும்.என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.