தமிழகத்தில் கொள்ளை, நகை பறிப்பு போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வரும் வட மாநிலத்தவர் தற்போது சேலத்தில் வேலை செய்த இடத்தில் அவர்களின் கை வரிசையை காட்டியுள்ளனர். சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் மளிகை கடைமொத்த வியாபாரம் செய்து வருபவர் மோகன்குமார், இவர் கடந்த பல வருடங்களாக தனது சொந்த வீட்டிலேயே மொத்தமாக மளிகைப் பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார், எந்த கடையில் வட இந்திய வாலிபர் ஓம் குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓம் குமார் அவரது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து மளிகை கடைக்கு வந்தவர் அங்கே கடை உரிமையாளர் மோகன் குமாரை கடைக்கு உள்ளே அவரை கடுமையாக தாக்கி உள்ளனர். பிண அவரை கட்டிப் போட்டுவிட்டு,அங்கே இருந்த பீரோவில் இருந்த 50 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து விட்டு ஓம் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
பின்பு கடை உள்ளே கட்டி வைக்கப்பட்டிருந்த கடை உரிமையாளர் மோகன்குமார் கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மோகன்குமார் மீட்டனர, பின் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அங்கே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஓம் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஓம் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் வேறு ஒரு மாநிலத்துக்கு தப்பி செல்லாமல் இருக்க மாநில எல்லைகளில் உள்ள செக் போஸ்ட்களுக்கு விரைந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திட்டமிட்டு செய்துள்ளதாக கூறப்படுகிறது,கொள்ளை சம்பத்தவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பணிபுரியும் இடத்திலேயே உரிமையாளரை தாக்கி வடமாநில இளைஞர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமீபகாலமான தொடர்ந்து தமிழகத்தில் கொள்ளை சம்பவத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், வேலை செய்த இடத்திலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கை வரிசையை காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.