உங்களுக்கு இந்த முறை தரமான சம்பவம் இருக்கு…இந்திய அணிக்கு சவால் விட்ட பாக்கிஸ்தான் வீரர்…

0
Follow on Google News

ஒட்டுமொத்த கிரிக்கெட் ஆர்வலர்களும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் 20 அணிகள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. மேலும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறது.

மற்றொரு பக்கம், கடந்த 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய மற்றும் உலகக் கோப்பை போட்டிகளில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி மீண்டும் இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பாபர் அசாம் தலைமையில் களம் இறங்க தயாராகிக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியை காண்பதற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இப்படியான நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி, உலகிலேயே மற்ற நாடுகளை விட பாகிஸ்தான் அணியில் பவுலிங் பவராகவும் வலுவாகவும் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து கிரிக்கெட் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டியானது உலகின் தீவிரமான போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மேலும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றாகும். இவ்வாறு இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஆவல் அதிகமாகவே இருக்கும்.
அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இம்முறை வருகிற ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற உள்ள போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் தங்கள் அணி தான் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னால் கேப்டன் ஐசிசி இணையத்தில் பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அவர் பேசுகையில், “இந்த உலகில் இருக்கும் எந்த கிரிக்கெட் அணியிலும் இதுபோன்ற வலுவான பௌலிங் லைன் அப் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எங்கள் அணியில் உள்ள வேகப்பந்துவீச்சாளர்களிடம் நிறைய திறமை உள்ளது. சொல்லப்போனால் எங்கள் அணியில் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அப்பாஸ் அப்ரிடி கூட ஸ்லோயர் பந்துகளை வீசுவதில் திறமை வாய்ந்தவர்.

இத்தகைய திறமை கொண்டுள்ள வீரர்கள் உலகக்கோப்பை போட்டிகளில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார்கள். இந்த முறையும் ஷடாப்கான் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டும். அவருடைய கடந்த கால போட்டிகளை எல்லாம் நான் பார்த்துள்ளேன். அவர் சிறப்பாக செயல்பட்ட போதெல்லாம் பாகிஸ்தான் வென்றுள்ளது.

இதுகுறித்து அவரிடம் விரிவாக விவாதித்தேன், தற்போது அவர் மோசமான காலத்தில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியும். எனவே அவரைப் போன்ற வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசி உத்வேகத்தை கொடுக்க முயற்சித்தேன். நான் பேசியதை பின்பற்றி பயிற்சிகளை எடுக்கும்போது அவர் போட்டியில் வித்தியாசமாக செயல்படுவதை பார்க்க முடியும்” என்று பாகிஸ்தான் அணியின் பவுலிங் லைன் பற்றி பெருமிதமாக கூறியிருந்தார்.எவ்வாறாயினும், 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் ஷாகின் அப்ரிடி,ஹரிஷ் ரவூப், நாசிம் ஷா போன்ற பாகிஸ்தான் பவுலர்களை கதற விட்டு இந்திய அணி வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.