ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் 2024 t20 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணி வெகுவிரைவில் நடைபெற உள்ளது. ரோகித் சர்மா கேப்டன்சியில் விளையாடவிருக்கும் இந்த அணியில் யாரெல்லாம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பல்வேறு யூகங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யப் போகிறது என்பதை பார்ப்பதற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தற்பொழுது நடைபெற்று வரும் 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் தருமாறு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நட்சத்திர வீரரான விராட் கோலி இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
ஏனெனில் உலகக் கோப்பை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் கிரவுண்டுகளின் பிட்ச்கள் மிகவும் ஸ்லோவாக இருக்கும் என்று தேர்வு குழு கருதுகிறது. அதே சமயம் விராட் கோலி t20 கிரிக்கெட்டில் குறைவான ஸ்ப்ரைக் ரேட்டில் அதிக ரன்கள் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆகவே விராட் கோலியின் ஆட்டத்திற்கு இது செட் ஆகாது என்றும், இந்த முறை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் தேர்வுக் குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நிலைமை இப்படி இருக்க, இதற்கிடையில் முன்னால் கிரிக்கெட் வீரர்கள் இந்தியா டி20 உலக கோப்பையை வெல்வதற்கு விராட் கோலி அவசியம் என்று அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி, t20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி ஓப்பனங்கில் களமிறங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால், ஹர்பஜன்சிங் சௌரவ் கங்குலி சொல்லுவது போல் விராட் கோலியை ஓப்பனிங்கில் களம் இறக்கினால் அது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் ஓபன்ங்கில் இறங்க வேண்டும் என்று விரும்புவதாகவும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹர்பஜன் சிங் கூறியிருப்பதாவது: “இந்தியாவுக்காக ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் கூட்டணி ஓப்பனிங் இல் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். மூன்றாவது இடத்தில் விராட் கோலி களமிறங்க வேண்டும். தேவைப்பட்டால் சிவம் துபே போன்ற வீரர்களுக்கு மூன்றாவது இடத்தில் வாய்ப்பு கொடுக்கலாம், விராட் கோலி நான்காவதாக விளையாடலாம். இந்த இடத்தில் சூழ்நிலைக்கு ஏற்றார் போல நாம் குதிரைகளை பயன்படுத்த வேண்டும். இதனால் எந்த அவமரியாதையும் கிடையாது.
ஆகவே இந்திய அணியின் வெற்றிக்காக விராட் கோலி மூன்றாவது இடத்தை சிவம் துபைவுக்கு விட்டுக் கொடுக்கலாம். ஒருவேளை இந்த கேள்வியை நீங்கள் விராட் கோலி இடம் கேட்டால் அவரும் அணியின் வெற்றி தான் முக்கியம் என்று கூறுவார்” என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.