இந்தியா கிரிக்கெட் அணியின் முக்கிய பொறுப்பு… தமிழக மக்களின் அன்புக்காக வேண்டாம் என தூக்கி எறிந்த தோனி…

0
Follow on Google News

வருகிற ஜூன் மாதம் 2024 டி20 உலக கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த உலகக் கோப்பை தொடருடன் முடிவடைகிறது. எனவே பிசிசிஐ தேர்வு குழு இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்ய உள்ளது.

அதன்படி, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், டிராவிட் விரும்பினால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் பிசிசிஐ தேர்வு குழுவின் செகரட்டரி ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து வியாழக்கிழமை மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய ஜெய்ஷா, “ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவடைய உள்ளது.

எனவே அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பெற விரைவில் அழைப்பு விடுக்க உள்ளோம். டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்க விரும்பினால், அவர் விண்ணப்பிக்கலாம். அதற்கான தகுதி அளவுகோல்களை நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதன்பிறகு கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து துணை ஊழியர்களுக்கான விண்ணப்பங்களை பெற அழைப்பு விடுப்போம். பயிற்சியாளரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் இருக்கும், ” என்று கூறியிருந்தார்.

ஜெய்ஷாவின் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ஆர்வலர்களும் ரசிகர்களும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்ற விவாதத்தை இணையத்தில் தொடங்கி விட்டனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வீரன் சேவாக் அனில் கும்லை மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் இந்த பதவிக்கு ஆர்வமாக விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது என்று பல்வேறு தரப்பினரும் சூடாக விவாதித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இந்த பதவிக்கு டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தாலும், அவர் மீண்டும் விண்ணப்பிக்க மாட்டார் என்றும் எனவே அவர் பதவியில் நீடிக்க வாய்ப்பில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ட்ராவிட்டுக்கு நிகரான ஒருவரை தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் அமர வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பிசிசிஐ தேர்வுக் குழு செயல்பட்டு வருகின்ற நிலையில்,

இந்திய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரும், மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனுமான தோனி தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றால் சரியாக இருக்கும் என கிரிக்கெட் போர்டுக்கு சிபாரிசு மேல் சிபாரிசு சென்று கொண்டிருக்கிறது. ஆனால் தோணி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்ப மாட்டார் என கூறப்படுகிறது.

காரணம் அவர் இந்திய அணியை எந்த அளவுக்கு நேசிக்கிறாரோ அதை விட ஒரு படி மேலே சிஎஸ்கே அணியை நேசிக்கிறார். இதற்கு முக்கிய காரணம் டோனி மீது தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் வைத்துள்ள எல்லை இல்லா அன்பு தான். அந்த வகையில் தன்னுடைய ஐ பிஎல் ஓய்வுக்கு பின்பு, சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக அல்லது சிஎஸ்கே அணியில் மிக பெரிய உயரிய பதவியில் இருக்கவே தோணி விரும்புவதால் இந்திய அணியின் தலைமை பயிற்சிளர் பொறுப்பை ஏற்க விரும்ப வில்லை என கூறப்படுகிறது.