உலக கோப்பை டி20 யில் கோலியை இந்திய அணியில் இருந்து தூக்கிய கிரிக்கெட் போர்ட்… கடைசி நேரத்தில் நடந்து ட்விஸ்ட்..

0
Follow on Google News

2024 டி20 உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. சுமார் 20 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடரில் இந்த முறையாவது இந்திய அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வலுத்து வருக்கிறது. இந்த நிலையில், தேர்வு குழு ஒரு அதிரடி திட்டத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளது.

அதாவது, 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணி இளம் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்திருந்தது. அதேபோல் இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்ய தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் முடிவு எடுத்திருந்ததாகவும் கடைசி நேரத்தில் ஜெய்ஷா தலையிட்டு திட்டத்தை கலைத்து விட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

அதாவது, இந்த ஆண்டு நடைபெற உள்ள t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ஜடேஜா, ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு பதிலாக இளம் கிரிக்கெட் வீரர்களை அணியில் தேர்வு செய்ய அஜித் அகர்கர் முடிவு செய்து இருக்கிறார். ஆனால் டி 20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தான் கேப்டன் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால் ரோகித் சர்மாவை தவிர விராட் கோலி மற்றும் ஜடேஜாவை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என்று அவர் முடிவெடுத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரவுண்டில் பந்து பேட்டிற்கு வராது என்பதால் அவரால் அங்கு ரன் குவிக்க முடியாது என்பதாலும், மேலும் கோலியிடம் போதிய ஸ்ட்ரைக் ரேட் இல்லை என்பதாலும் அகார்கர் விராட் கோலியை அணியில் சேர்க்க வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.இதற்கு கோலி ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இப்படியான சூழலில், நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற தேர்வு குழு கூட்டத்தில் ஜெய்ஷா பங்கேற்று சுமார் 2 மணி நேரம் அகார்கருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த சந்திப்பிற்குப் பிறகுதான் அதிகாரப்பூர்வ இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதாவது, அகார்கர் ஸ்ட்ரைக் ரேட்டை காரணம் காட்டி விராட் கோலீயையும் ஜடேஜாவையும் இந்திய அணியில் இருந்து தூக்க முடிவெடுத்தார்.

ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட ஜெய்ஷா தனது பவரை பயன்படுத்தி ஜடேஜா கோலி உள்ளிட்ட வீரர்கள் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும் என்றும் கே எல் ராகுலை வேண்டுமானால் அணியில் இருந்து தூக்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. டி20 உலக கோப்பை அமெரிக்காவில் நடைபெறுவதை காரணமாக கூறிய ஜெய்ஷா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் இருந்தால் தான் தொடரில் வெற்றி பெற முடியும் என்றும், நடப்பு ஐபிஎல் சீசன் எல்லாம் அவர் அபாரமாக விளையாடி வருவதால் இந்தியா அணிக்கு அவர் நிச்சயமாக தேவைப்படுவார் என்றும் அகார்கரியிடம் கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒரு பக்கம் அகார்கர் என்னென்னவோ திட்டம் போட்டு, இந்த ஆண்டு இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க முயற்சித்த போதிலும், இந்த விவகாரத்தில் ஜெய்ஷா மூக்கை நுழைத்து மூத்த வீரர்கள் கண்டிப்பாக இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று காரராக சொல்லிவிட்டார். அடுத்த முறையாவது இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.