சென்ற மே மாதம் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டமாக இந்த ஜூன் மாதம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கிவிட்டது. இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
வருகிற ஜூன் ஐந்தாம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ள போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி முதலாவதாக அயர்லாந்து கிரிக்கெட் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதே மைதானத்தில் இதில் வரும் ஜூன் ஒன்பதாம் தேதி இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் மோதவிருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்படும் இந்தியா -பாகிஸ்தான் போட்டியில் இந்த முறை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் அதிகமாக உள்ளது.
இப்படியான நிலையில், பல்வேறு நாடுகளின் முன்னால் கிரிக்கெட் வீரர்கள் தங்களது யூகங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இந்திய முன்னால் கிரிக்கெட் வீரரான முகமது கைஃப், பாகிஸ்தான் அணி குறித்தும் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் குறித்தும் அவரது கருத்தை வெளிப்படையாக கூறி இருக்கிறார். பாகிஸ்தான் அணி குறித்து அவர் கூறியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த அணிகள் இடையேயான போட்டியை ஆவலுடன் பார்த்து ரசிப்பார்கள். அந்த அளவிற்கு இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையே அணை கிரிக்கெட் போட்டி பிரபலமான ஒன்றாகும்.
இந்தியா பாகிஸ்தான் அணிகளை பொருத்தவரை, பாகிஸ்தான் அணியை விட இந்தியா வலுவான அணியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கிய அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றியை பதிவு செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் டி20 உலக கோப்பையில் 2021 துபாய் தோல்வியை தவிர மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
எனவே இந்த முறையில் இந்தியா தான் வெற்றி பெறும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், “பாகிஸ்தான் அணி பலவீனமாக இருப்பது அனைவருக்கும் தெரியும்” என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் கருத்து தெரிவித்துள்ளார். எனவே இந்த முறையும் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதே சமயம் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஃபாக்கர் ஜமான் தனி ஒருவனாக அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடிக்கும் அளவிற்கு திறமை கொண்டுள்ளதாகவும் புகழ்ந்து பேசி உள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் அணியில் உள்ள மற்ற பேட்ஸ்மேன்கள் 120 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே அடிக்கக் கூடியவர்களாக இருப்பதால், இந்திய அணி எளிதாக போட்டியை வென்று விடும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் முகமது கைப் பேசுகையில், “பாகிஸ்தான் அணியில் பாக்கர் ஜமான் அதிரடியாக விளையாடுவார். ஒருவேளை அவர் நெருப்பாக விளையாடினால், தனி ஒருவனாக பாகிஸ்தான் அணிக்கே வெற்றியை பெற்றுக் கொடுப்பார். இப்திகார் அகமது என்பவரும் வேகமாக விளையாடுவார். ஆனால் இவர்களை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே 120 ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாடுகிறார்கள்.
எனவே அவர்கள் பேட்டிங்கை பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. இருப்பினும் பாகிஸ்தான் அணியின் பௌலிங் லைன் அப் கொஞ்சம் நம்மை பயமுறுத்தக் கூடியது. அந்த அணியில் சாகின் அப்ரடி, நாசிம் ஷா ஆகியோர் உள்ளனர்.” என்று பாகிஸ்தான் பவுலிங் பேட்டிங் கொடுத்து முகமது கைஃப் தனது கருத்தை வெளிப்படையாக கூறி இருக்கிறார்.