சச்சின் மானத்தை காற்றில் பறக்க விட்ட அவருடைய மகன்… இந்த அவமான சச்சினுக்கு தேவை தானா?

0
Follow on Google News

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சார்பில் பந்து வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் பாதியிலேயே ஓய்வறைக்குச் சென்றுவிட்டார். இந்த நிகழ்வு தற்போது ரசிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. திடீரென அர்ஜுன் டெண்டுல்கர் பவுலிங் செய்யாமல் போனதற்கு காரணம் என்ன என்பதை பற்றி இங்கே பார்க்கலாம். பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

மும்பை அணியின் இளம் வீரரான அர்ஜுன், லக்னா அணிக்கு எதிராக பவுலிங் செய்ய களம் இறங்கி 2.2 ஓவர்களோடு பந்து வீசாமல் ஓய்வறைக்கு திரும்பி விட்டார். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படியான சூழலில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 67 வது லீக் போட்டியில் லக்னோ அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி அபாரமாக விளையாடி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. அதை அடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட்டுகளை பறிகொடுத்து 196 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

விறுவிறுப்பாக நடந்து முடிந்த இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. மேலும் அவருக்கு பதிலாக இளம்வீரர் அர்ஜுன் டெண்டுல்கரை களம் இறக்கியது மும்பை அணி. இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக மும்பை அணி களம் இறக்கியதால், ரசிகர்கள் மத்தியில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஏற்கனவே கடந்த சீசனில் தன்னால் ஸ்விங் வீச முடியும் என்று அர்ஜுன் தனது திறமையை நிரூபித்து இருந்தார்.

அதனாலேயே இந்த போட்டியில் இரண்டாவது ஓவரில் பந்து வீச வரவழைக்கப்பட்டார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர், கடைசி பந்தில் ஆக்ரோஷமாக பந்தை வீசி ஸ்டாய்னிஸை அவுட் செய்ய முயற்சித்தார். ஆனால் சுதாரித்துக் கொண்ட ஸ்டாய்னிஸ் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து 5வது ஓவரை வீச வந்த அர்ஜூன் டெண்டுல்கர், 7 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் 2 ஓவர்களில் 10 ரன்களை மட்டுமே அர்ஜூன் டெண்டுல்கர் விட்டுக் கொடுத்திருந்தார்.

இவ்வாறு சிறப்பாக பந்து வீசி வந்த அர்ஜுனுக்கு மீண்டும் 15 ஆவது ஓவரில் பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மகிழ்ச்சியில் களமிறங்கிய அர்ஜுனுக்கு திடீரென்று காலில் பிடிப்பு ஏற்பட்டது. இருப்பினும், பந்து வீசிய அர்ஜுனுக்கு பூரண் மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தார். காலில் சுளுக்கோடு 2 பந்துகளும் டாஸ் பாலாக வீசப்பட்ட நிலையில், இரண்டிலும் பூரன் சிக்சர் விளாசினார்.

இது அர்ஜுனுக்கும் மும்பை அணி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே சுதாரித்துக் கொண்ட அர்ஜுன், இதற்கு மேலும் இந்த நிலையில் பந்து வீசினால் சர்ச்சையை எதிர்கொள்ள நேரிடும் என்று பீதி அடைந்து அந்த ஓவரை முழுமையாக வீசாமலேயே ஓய்வறையை நோக்கி நடந்தார். இதனால் இணையத்தில் பலரும் சச்சின் மானத்தை அவருடைய மகன் வாங்கி விட்டார் என்று சரமாரியாக ரோஸ்ட் செய்து வருகின்றனர். கடந்த சீசனை காட்டிலும் அர்ஜூன் டெண்டுல்கர் கொஞ்சம் கூடுதல் வேகத்தில் வீசியதை பார்க்க முடிந்தது. ஆனால் ரன் அப்பில் மாற்றம் செய்யாமல் அர்ஜூன் டெண்டுல்கர் பவுலிங் செய்தது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.