ஏழ்மையில் வாடிய ரோஹித் சர்மா…கண் கலங்க வைக்கும் ரோஹித் சர்மாவின் வாழ்க்கை வரலாறு…

0
Follow on Google News

கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ரோகித் சர்மா, சென்ற ஆண்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூவகைப் போட்டிகளுக்கும் இந்திய அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டு டி20 உலகக் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமையேற்று வழிநடத்தினார் ரோகித். இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக உயர்ந்துள்ளபோதும் சிறுவயதில் கிரிக்கெட் சார்ந்த பொருள்களை வாங்க மிகுந்த சிரமப்பட்டார் ரோகித் சர்மா.

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ரோகித் சர்மா அவருடைய சிறுவயதில் ‘கிரிக்கெட் கிட்’ வாங்கப் பணமின்றிச் சிரமப்பட்ட போது, வீடு வீட்டுக்கு பால் பாக்கெட் போட்டுள்ளார் என்றால் பாருங்களே. 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள பன்சோடில் பிறந்த ரோகித் சரமாவிற்கு, தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் பள்ளிக் கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில் இருந்தார்.

ரோகித் சர்மாவின் தந்தையான குருநாத சரமா, சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் குறைந்த சம்பளத்திறகு வேலை பார்த்து வந்தார். இதனால் ரோகித் சர்மாவுடன் பிறந்த மற்றொரு சகோதரர் விஷால் சரமா ஆகிய இருவரையும் பார்த்துக் கொண்டு குடும்பத்தையும் நடத்த முடியவில்லை. இதனால் ரோகித சர்மாவை அவரது சித்தப்பா வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அவரது தந்தை.

ஆரம்பம் முதலே கிரிகெட் ஆர்வம் இருந்த ரோகித் சர்மாவிற்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவரது வாழ்வில் திரும்பு முனையாக இருந்தவர் தான் சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட். ரோகித் சர்மாவின் தீவிர பயிற்சி அவரை இந்திய அணியில் இடம் பெறச் செய்தது. 2007ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தனது சர்வதேசப் பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடிய ரோகித் சர்மா, 2009ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கோப்பையை வென்றார்.

அதன்பிறகு 2011இல மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர், 2013-இல் கேப்டன் பொறுப்பை ஏற்று 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 என 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பை வென்று கொடுத்துள்ளார். ஆனால் இன்று அவரையே கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேற்றியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, அவரை ஒரு வீரராக மட்டுமே விளையாடுமாறு நிர்பந்தித்துள்ளது.

ஒரு இன்னிங்ஸுக்கான ரன்களை அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலமாகவே எட்டியது, அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் போன்ற சாதனைகளை உள்ளடக்கிய அந்த 264 ஆகட்டும், மூன்று அடுத்தடுத்த சதங்களுக்கான சாதனையை நிகழ்த்திக் காட்டிய 2019-ம் ஆண்டு ஹாட்ரிக் இன்னிங்ஸ்கள் ஆகட்டும், ஒரு 50 ஓவர் உலகக்கோப்பையில் அதிக சதங்கள் (5), ஒரே காலண்டர் வருடத்தில் அதிக சதங்கள் (7) அடித்து எக்காலத்திலும் தனது பேட்டுக்குத் துருப்பிடிக்காது என நிரூபித்த 2019 ஆகட்டும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் எல்லா வழிகளிலும் ஏதோ ஒரு வகையில் அவரது தாக்கம் ஒருநாள் ஃபார்மட்டுக்குரிய களங்களில் நிகரற்றதாகவே அமைந்திருக்கிறது.

கொரோனாவால் கிரிக்கெட் விழுங்கப்பட்ட அந்தப் பெரும்பாலான கால இடைவெளியில் எஞ்சியவற்றில்கூட ரோஹித்தால் பெரியளவில் சாதிக்க முடியவில்லை. பல போட்டிகளில் காயம், சுழற்சி முறை வாய்ப்பு, விருப்ப அல்லது கட்டாய ஓய்வு, அடுத்த தலைமுறை வீரர்களுக்கான தேடுதல் வேட்டையின் விளைவு எனப் பல காரணங்களும் அவரை ஒருநாள் போட்டிகளில் இருந்து விலக்கியே வைத்திருந்தன. 2020-ல் இந்தியா ஆடிய ஒன்பது போட்டிகளில் மூன்றில் மட்டுமே ரோஹித் பங்கேற்று இருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அத்தொடரில் முதல் இருபோட்டிகளில் ஆளுக்கொரு வெற்றியை பதிவேற்றி இருக்க டிசைடரான மூன்றாவது போட்டியில் ரோஹித்தின் 119தான் பெரும் வித்தியாசத்தைக் கொண்டு வந்து போட்டியையும் தொடரையும் இந்தியாவை வெல்ல வைத்தது. அதேநேரம் எங்கேயும் முடியாது என்று சரணடையும் மனப்பாங்கையும் ரோஹித்திடம் பார்க்கவே முடியாது, குறைந்த ஸ்கோரினை டிஃபெண்ட் செய்வது மிகவும் பிடிக்கும் என அவரே சொன்னது போல் சவால்கள்தான் அவரை இன்னமும் சீர்தூக்கிக் காட்டுபவை.