ரோஹித், புர்மானு வெளியே போறவங்க போயிட்டே இருங்க… அம்பானி குடும்பத்தினர் காட்டும் திமிர்…

0
Follow on Google News

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிறேன மே 27ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதுவரை 58 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை பெற்று ‘ஒன் பேமிலி’ என்று கெத்தாக வலம் வந்து கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே தொடர் தோல்விகளையும் பல்வேறு பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறது.

கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி அதன் பிறகு மூன்று ஆண்டுகளாக சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. இதனால் அப்செட் ஆன அம்பானி குடும்பத்தினர் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை அழைத்து வந்து கேப்டனாக நியமித்தனர். மும்பை அணி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த மும்பை அணி ரசிகர்களையும் கொந்தளிக்க செய்தது.

இதன் விளைவு நடப்பு சீசனில் மும்பை அணி விளையாடும் போட்டிகளில் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர். மற்றொரு பக்கம், அணியை சரியாக வழி நடத்த முடியாமல் கேப்டன் ஹர்திக் பாண்டியா மிகவும் திணறினார். நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி எட்டு தோல்வி நான்கு வெற்றி என புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.

மும்பை அணியின் வீழ்ச்சிக்கு கேப்டன் மாற்றம் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில், மும்பை அணியின் தோல்விக்கான காரணம் குறித்தும், அணி வீரர்களிடையே உள்ள பிரச்சனை குறித்தும் விவாதம் செய்ய அணியில் உள்ள சீனியர் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளியான தகவல்களின்படி, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மும்பை அணியின் மூத்த வீரர்கள் ஆன ரோகித் சர்மா, பும்ரா, சூரியகுமார் யாதவ் கலந்து கொள்ள உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

முக்கியமாக இந்த கூட்டத்தில், அணியில் என்ன சிக்கல் இருக்கிறது? எந்த மாற்றங்களை செய்ய வேண்டும்? தொடரை எவ்வாறு முடிக்க வேண்டும் அடுத்த சீசனில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், மும்பை அணியின் தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் நடவடிக்கை மற்றும் செயல்பாடு குறித்து மும்பை அணி நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் எழுதப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி குறித்து அணி நிர்வாகி ஒருவர் அளித்த விளக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி குறித்து பெரிய அளவில் தாங்கள் கவலைப்படவில்லை. தலைமை பொறுப்பிலிருந்து ஒருவர் மாறி வேறொருவர் வரும்போது, இது போன்ற சரிவுகள், பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். இது விளையாட்டு துறையில் எப்போதும் நடைபெறும் ஒரு விஷயம் தான் என்பதால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

அவரது இந்த கருத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்த மும்பை அணி நிர்வாகம், நடப்பு ஐபிஎல் சீசனில் ஏமாற்றம் அடைந்துள்ளது. இதனால் மும்பை அணி நிர்வாகம் நிச்சயமாக ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிடும் என்று பலரும் யூகித்து வந்தனர்.

தற்சமயம், மும்பை அணி நிர்வாகி இவ்வாறு கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை எனி படுமோசமாக தோல்வி அடைந்த போதிலும் அம்பானி குடும்பத்தினர் ஹர்திக் பாண்டியாவுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குகின்றனர் குறிப்பாக ரோஹித், புர்மா என யார் வேண்டுமாலும் வெளியேறட்டும் ஹர்திக் பாண்டியா தான் கேப்டன் என்பதில் அம்பானி குடும்பத்தினர் உறுதியாக இருப்பதால், கடுப்பாகும் சீனியர் வீரர்கள் அடுத்த ஆண்டு மும்பை அணியில் இருந்து விலகி வேற அணிக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.