டோனிக்கு நிகராக விளையாடும் ரிங்கு சிங்குக்கு இந்திய அணியில் இடமில்லை… கிரிக்கெட் போர்ட் உள்ளே நடக்கும் கேவலமான பண அரசியல்…

0
Follow on Google News

T20 உலக கோப்பை தொடர் வருகிற ஜூன் மாதம் தொடங்கவிருக்கின்ற நிலையில், பிசிசிஐ தேர்வு குழு இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட பட்டியலை ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிட்டது. இதில் சஞ்சு சாம்சன் சிவம் துபே போன்ற புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும், இந்தப் பட்டியல் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்று கூறலாம்.

ஆம், ஒரு பக்கம் இந்த முறையும் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று சர்ச்சை வெடித்துக் கொண்டிருக்கையில், மற்றொரு பக்கம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது அவரையும் அவரது குடும்பத்தையும் மற்றும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ரிங்கு சிங் பிரதான 15 வீரர்களின் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. கூடுதலாக அறிவிக்கப்பட்டிருக்கும் நாலு பேர் கொண்ட பட்டியலில் தான் இடம் பிடித்திருக்கிறார்.

எனவே, முக்கிய அணியில் இருக்கும் வீரர்கள் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் மட்டுமே ரிங்கு சிங் விளையாடும் வாய்ப்பை பெறுவார். இதுவரை இந்திய t20 அணிக்காக 11 போட்டிகளில் விளையாடியிருக்கும் ரிங்கு சிங், 356 ரன்களை 176 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். எப்போதும் போட்டியின் கடைசியில் களம் இறங்கும் ரிங்கு சிங், அபாரமாக விளையாடி சில ஓவர்களிலேயே ஆட்டத்தின் முடிவை மாற்றி விடுவார்.

இதனால் பல பெரிய முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவரை மகேந்திர சிங் தோனியுடன் ஒப்பிட்டு பாராட்டி இருக்கிறார்கள். மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். இப்படி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மிகச் சரியாகப் பயன்படுத்தி, நல்ல ஸ்ட்ரைக்ரேட்டில் தடாலடியாக விளையாடி வரும் ரிங்கு சிங்கை பிசிசிஐ தேர்வு குழு 15 பேர் கொண்ட முக்கிய அணியில் எடுக்கவில்லை என்பது அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இது குறித்து ரிங்கு சிங்-ன் தந்தை அளித்த பேட்டி ஒன்றில், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி பட்டியல் மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாகவும் இதனால் ரிங்கு சிங் மனமுடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து ரிங்கு சிங் தந்தை பேசும்பொழுது, “ரிங்கு சிங் 15 பேர் கொண்ட முக்கிய அணியில் இடம் பிடிப்பார் என்று எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது.

இதனால் நாங்கள் முன்கூட்டியே இனிப்புகளும் பட்டாசுகளும் வாங்கி வைத்து ஆவலுடன் காத்திருந்தோம். ஆனால் அவர் 11 பேர் கொண்ட அணியின் இடம்பெறவில்லை. மாறாக 18 பேர் கொண்ட பட்டியலில் தான் இடம் பிடித்திருக்கிறார். இது மிகவும் ஏமாற்றமாக இருப்பதாக அவர் தன் தாயிடம் மனமுடைந்து கூறி இருக்கிறார்” என்று ரிங்கு சிங்கின் தந்தை வேதனையுடன் பேசியுள்ளார்.

தற்போதைய இந்திய அணி பட்டியலில் இடம்படித்துள்ள, ஹர்திக் பாண்டியா ஜடேஜா போன்ற வீரர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். அதேபோல சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடக் கூடியவர். இருப்பினும் தற்போதைய சூழலில் இவர்களுடன் ஒப்பிடுகையில் ரிங்கு சிங் சிறந்த ஆப்ஷனாக தான் இருக்கிறார். ஏனெனில் ரிங்கு சிங் அதிரடி காட்டக்கூடிய பினிஷர் ஆவார். இருப்பினும் பிசிசிஐ அவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது தெரியவில்லை. நடப்பு ஐபிஎல் சீசனில் ரிங்கு சிங்கின் பெர்ஃபார்மென்ஸ் கொஞ்சம் சுமாராக இருப்பதால் பிசிசிஐ தேர்வு குழு தயக்கம் காட்டி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.