கிழிந்த டவுசருடன் பந்து புறக்கி போட்ட நடராஜன்… நடராஜனை உச்சத்துக்கு கொண்டு சென்ற யார் அந்த ஜெபி தெரியுமா.?

0
Follow on Google News

கிரிக்கெட் வீரர் நடராஜனின் தந்தை நெசவு தொழில், தாய் உணவகம் நடத்தி வந்தவர், அவ்வ போது தாய்க்கு உணவகத்தில் உதவியாகவும், தந்தைக்கு நெசவு தொழிலுக்கு உதவியாக இருந்து கடுமையாக போராடி தன்னுடைய லட்சியத்தை அடைந்த நடராஜன் கடந்து வந்த பாதையை சற்று பின்னோக்கி திரும்பி பார்த்தால் நமது கண் கலங்கி விடும். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் பிறந்த நடராஜன் பிறந்தது ஏழ்மையான குடும்பம்.

பள்ளி படிக்கும் காலத்தில் அவர் அணிந்திருக்கும் டவுசர் கிழிந்து அதில் பல ஒட்டு துணிகளால் தைக்கப்பட்டிருந்தாலும், அந்த ஒட்டு துணியால் தைக்கப்பட்ட டவுசரை அணிவதற்கு கொஞ்சமும் கூச்சமே படாமல் அணிந்து கொள்வாராம். தாய் தந்தையின் வறுமையை அறிந்து சிறு வயதில் இருந்தே எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என அடம் பிடிக்காமல் இருப்பதை வைத்து வாழ்ந்து வந்துள்ளார் நடராஜன்.

ஜெயபிரகாஷ் என்கிற நபர் அவரது அணி கிரிக்கெட் விளையாட சென்றால் கூடவே நடராஜனும் சென்று விடுவார், அங்கே பந்து புறக்கி போடும் வேலை தான் நடராஜனுக்கு. ஆனால் அந்த பந்தை புறக்கி போடும் போது கூட தன்னுடை இடது கையால் ஒரு சுத்தி சுத்தி வேகமாக நடராஜன் தூக்கி போடுவதை பார்த்த ஜெயப்ரகாஷ், இவனை உள்ளே விளையாட விட்டால் என்ன என நடராஜனை தன்னுடைய அணியில் சேர்ந்து கொண்டு எங்கெல்லாம் கிரிக்கெட் விளையாட போனாலும் நடராஜனை அழைத்து சென்று விடுவார்.

நடராஜன் பெற்றோர்களும் ஜெயப்ரகாஷிடம் என்னுடைய மகன் நடராஜனுக்கு என்ன பிடிக்குதோ அதை செய்யட்டும் என ஒப்படைத்து விட்டார்கள். நடராஜனை கல்லூரியில் சேர்க்கும் போது அவருடைய தந்தைக்கு தன்னுடைய மகன் நடராஜனுக்கு உடை வாங்கி கொடுக்க கூட பணம் இல்லாத கஷ்டம். அந்த காலகட்டத்தில் ஜெயப்ரகாஷ் தான் நடராஜனுக்கு உடை, ஷு என அவருக்கு தேவையான அனைத்தையும் வாங்கி கொடுத்துள்ளார்.

ஜெயபிரகாஷ் உதவியில் உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்று தன்னுடைய திறமையை வளர்த்து கொண்ட நடராஜன், தன்னுடைய கடுமையான முயற்சியில், பல்வேறு போராட்ட்டங்களுக்கு மத்தியில், கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியம். நடராஜனை டிவிசன் கிரிக்கெட் பிறகு டி.என்.பிஎல் என கொண்டு சேர்த்தது. ஆனால் சிவிசன், டி.என்.பிஎல் என நடராஜனை சென்னை வரை கொண்டு சேர்த்து ஜெயபிரகாஷ்.

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் வலை பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பெற்று இருந்தார் நடராஜன், ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருவர் காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து, யாரை அவருக்கு பதிலாக விளையாட வைப்பது என்கிற ஆலோசனையில், வலை பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பெற்று இருந்தார் நடராஜனை இறக்கிவிட முடிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா நடத்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அணைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடராஜனை உலகம் உற்று பார்க்க தொடங்கியது. நடராஜன் வீசிய ஓவ்வொரு பந்தும் உலக கிரிக்கெட் சாம்பியன் கவனத்தை ஈர்த்தது மட்டுமில்லாமல், ஒவ்வொரு தமிழனும் நடராஜனை கொண்டாட தொடங்கினார்கள்.

இந்த நிலையில் தான் இந்த உயரத்துக்கு வருவதற்கு காரணமாக இருந்து ஜெயபிரகாஷ் ஆலோசனை படி நடராஜன் தன்னுடைய சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் கிரிக்கெட் அகாடமியை உருவாக்கி தன்னை போல் ஏழ்மையில் உள்ள கிரிக்கெட் விளையாட்டில் திறமை வாய்ந்த இளைஞர்கள் உலக அரங்கில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக ஐபிஎல் போட்டியின் மூலம் தனக்கு கிடைக்கும் கோடி கணக்கான பணத்தில், தனது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அந்த மைதானம் திறப்பு விழாவின் போது தினேஷ் கார்த்திக், யோகி பாபு என பலரும் வந்தாலும் கூட நடராஜனை உருவாக்கிய ஜெயப்ரகாஷ் மேடைக்கு வரவில்லை, காரணம் எனக்கு பெயர் புகழ் வேண்டாம், நான் மேடைக்கு வந்தால் மீடியா வெளிச்சத்துக்கு வந்து விடுவேன் என மறுத்து விட்டாராம். மேலும் பல மீடியாக்கள் ஜெயபிரகாசை பேட்டி காண முயற்சித்தும் எனக்கு பெயர் புகழ் வேண்டாம் என பேட்டி கொடுக்க மறுத்து விட்டாராம். ஆனாலும் தான் இந்த நிலைக்கு காரணம் ஜெபி தான் என அணைத்து ஜெயபிரகாஷ் பெயரை நடராஜன் உச்சரிக்காத மேடைகள் கிடையாது.