டி20யில் கார்த்திக் பாண்டியாவுக்கு பதில் நடராஜனுக்கு வாய்ப்பு… பிசிசிஐயடம் மல்லு கட்டிய ரோகித்சர்மா…

0
Follow on Google News

2024 டி20 உலக கோப்பை தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. ரோகித் சர்மா தலைமையில் விளையாடவிருக்கும் இந்த அணியில் ஹர்திக் பாண்டியாவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பட்டியலை வெளியிடுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, பிசிசிஐயின் தேர்வுக்குழு தலைவர் அகர்கரும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் இது சம்பந்தமான ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்து ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐயின் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் இடையில் நடந்த வாக்குவாதம் தற்பொழுது வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அகர்க்கர் இருவரின் முடிவுகளையும் தாண்டி நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஹர்திக் பாண்டியாவை உலகக் கோப்பைக்காண இந்திய அணியில் தேர்வு செய்ததற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பதை பார்க்கலாம். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக வெளியேறியது.

இதற்குக் காரணம் ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சி தான் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் திறம்பட செயல்பட்டு ஆல்ரவுண்டராக கலக்கிக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் படுமோசமாக விளையாடி வருகிறார். இந்த முறை ஐபிஎல் தொடரில் வந்து வீட்டில் பெரிய தாக்கத்தை காட்டாத ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கிலும் சுமாராக விளையாடி வருகிறார்.

இதன் விளைவு அவர் தலைமை தாங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி பெரும்பாலான போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெற முடியாமல் திணறி வந்த மும்பை அணி முதல் ஆளாக தொடரில் இருந்து வெளியேறியும் விட்டது. எனவே, ஃபார்ம் அவுட்டில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவை இந்திய டி20 அணியின் தேர்வு செய்ய வேண்டாம் என்று ரோகித் சர்மா பரிந்துரைத்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் பிபிசிஐ தேர்வு குழு தலைவர் அகார்கரிடம், ஹர்திக் பாண்டியா பதில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரோஹித் சர்மா கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதற்கு அகார்கர் ஒரு கட்டத்தில் ஓகே சொன்னாலும் கூட, பி சி சி ஐ உயர் அதிகாரி ஒருவர், கண்டிப்பாக ஹர்திக் பாண்டியாவின் பெயர் டி20 இந்தியா அணியில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

மேலும் அந்த அதிகாரி, ரோஹித் சர்மாவுக்கு வயதாகி விட்ட நிலையில் 2024 டி20 உலக கோப்பைக்கு பின் இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனை தயார் செய்ய வேண்டிய நிலை இருப்பதை அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். இந்திய அணிக்காகான அடுத்த கேப்டனை இப்போதே தயார் செய்ய வேண்டும் என்று அந்த அதிகாரி வலியுறுத்தியதன் பெயரில் ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் தேர்வு செய்வது மட்டும் இன்றி துணை கேப்டன் ஆகவும் பிசிசிஐ நியமித்துள்ளது. ஆகவே ஹர்திக் பாண்டியா எதிர்காலத்தில் இந்திய டி20 அணிக்கு மட்டும் இல்லாமல் ஒரு நாள் உலக கோப்பை அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.