தோனி செய்த அந்த செயல் … கண் கலங்கிய ரசிகர்… தோனி மனித கடவுள் தான்..

0
Follow on Google News

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து கோலாகலமாக நடைபெற்ற முடிந்தது. மற்ற அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்களும் ஆதரவாளர்களும் சற்று அதிகமாகவே இருப்பார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள பேராதரவுக்கு முக்கிய காரணம் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். அந்த அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் தோனி மீது அலாதியான மரியாதையும் அன்பும் வைத்திருக்கின்றனர்.

இப்படியான நிலையில், இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி, ருத்துராஜ் தலைமையிலான சென்னை அணியில் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆக மட்டுமே விளையாடினார். மேலும் இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் என்றும், இதற்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விடுவார் என்றும் தகவல்கள் கசிந்த நிலையில், அவரது ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் மைதானங்களுக்கு சென்று பேராதரவு கொடுத்தனர்.

இவ்வளவு அன்புடன் சென்னை அணி விளையாடும் போட்டிகளில் எல்லாம் கலந்து கொண்டு உற்சாகமூட்டிய ரசிகர்களுக்கு அதிரடியாக சிக்சர்களை பறக்க விட்டு விருந்து படைத்தார் தோனி. ஒரு கிரிக்கெட் வீரராக தோனி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். இருப்பினும், நெருக்கடியான சூழலிலும் நிதானமாக முடிவு எடுப்பது, எப்போதும் கூலாக இருப்பது போன்ற அவரது பண்புகளே ஏராளமான ரசிகர்களை கவர்ந்திழுக்கக் காரணம்.

இதனாலே தோனிக்கு வெறித்தனமான ரசிகர்கள் பலர் உண்டு. இப்படி தோனியின் வெறித்தனமான ரசிகர்களில் ஒருவர், தோனியை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கிய போது, தோனி என்னவெல்லாம் கூறினார் என்பது பற்றி விரிவாக ஒரு வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், பலரும் தோனியின் மனப்பான்மையை பாராட்டி வருகின்றனர்.

அப்படி அந்த ரசிகர் இடம் தோனி என்ன கூறினார் என்பதை பார்க்கலாம். கடந்த மே பத்தாம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் ஐட்டம்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. சென்னை அணி விளையாடும் போட்டி என்பதால் ஏராளமான சென்னை அணி ரசிகர்கள் மஞ்சள் நிற ஜெர்ஸ்ஸியில் ஸ்டேடியம் முழுவதும் நிறைந்திருந்தனர்.

மைதானத்தில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தீவிரமா தோனி ரசிகர் ஒருவர் அங்கு போடப்பட்டிருந்த அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி எகிரி குதித்து தோனியை பார்ப்பதற்காக மைதானத்திற்குள் ஓடினார். ரசிகர் ஓடி வருவதை பார்த்ததும் அவருக்கு கை கொடுக்காமல் சிறிது நேரம் அங்குமிங்கும் ஓடி விளையாட்டு காட்டினார். இறுதியாக தோனி நின்று விட்டார். உடனடியாக அந்த ரசிகர் ஓடிப்போய் தோனி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு மைதானத்தில் இருந்த காவலர்கள் அந்த ரசிகரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, டோனியை சந்தித்த தருணம் எப்படி இருந்தது, அன்றைய தினம் தோனி என்ன கூறினார் என்பது பற்றி அந்த ரசிகர் ஒரு வீடியோவில் விரிவாக பேசி இருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: “மைதானத்தில் தோனியை பார்த்ததும் மகிழ்ச்சியில் கையை உயர்த்தி தூக்கினேன்.

அப்போது நான் ஜாலியாக இருக்க முயற்சிக்கிறேன் என்று மகிபாய் கூறினார். பின்னர் உற்சாக மிகுதியில் ஓடிப்போய் அவரது கால்களை தொட்டு ஆசீர்வாதம் வாங்கினேன். அவரைத் தொட்டதும் என் கண்கள் கலங்கின. அப்போது நீ ஏன் இவ்வளவு மூச்சு வாங்குகிறாய் என்று என்னிடம் கேட்டார். என்னுடைய மூக்கில் பிரச்சனை இருக்கிறது. இந்த நிலையில் மைதானத்திற்குள் எதிரி குதித்து ஓடி வந்ததால் இவ்வாறு மூச்சு வாங்குகிறது என்று அவரிடம் கூறினேன். அதற்கு “கவலைப்படாதே உனக்கு எதுவும் ஆகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். உன் சிகிச்சைக்கான செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று என்னிடம் அக்கறையாக கூறினார்” இன்று அந்த ரசிகர் வீடியோவில் தெரிவித்துள்ளார் .