தோனி அப்படி என்ன சாதித்து விட்டார்… சிக்ஸ் அடித்த பெரிய இதுவா.. கோபத்தில் கொந்தளித்த ஹர்பஜன் சிங்.

0
Follow on Google News

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் மகேந்திர சிங் தோனியின் சிக்ஸ் குறித்து மனோஜ் திவாரி புகழ்ந்து பேசிய போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டென்ஷனாகி பேசிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. 

சென்னை அணி அதன் முதல் ஐபிஎல் கோப்பையை வென்று 15 ஆண்டு முடிவடைந்த நிலையில், இணையம் முழுவதும் ரசிகர்கள் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு 15 ஆண்டு நிறைவை கொண்டாடினர்.மேலும் ஏராளமான ரசிகர்கள் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை- மும்பை அணி இடையே நடந்த போட்டியின் நினைவுகளை பகிர்ந்து வந்தனர்.

இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் இறங்கிய சென்னை அணி ஐந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 168 ரன்கள் எடுத்திருந்தது. அன்றைய போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 35 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதன் பிறகு களம் இறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 146 ரன்கள் மட்டுமே சேர்த்து இருந்தது.

இந்த போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர் பெல்லார்டு கடைசியாக களம் இறங்கி 10 பந்துகளில் இரண்டு சிக்ஸ், 3 பவுண்டரி என்று பந்துகளை பறக்க விட்டார். மொத்தமாக பத்து பந்துகளில் 27 ரன்களை குவித்து அதிரடி காட்டி இருந்தார். இவ்வாறு அதிரடியாக விளையாடி வந்த பெல்லார்டை வீழ்த்துவதற்கு தோனி பீல்டிங்கை மாற்றி அமைத்தார்.

அந்த நேரத்தில் தோனி மாற்றி அமைத்த ஃபீல்டிங் குறித்து ரசிகர்கள் மத்தியில் இன்ற அளவிலும் பேசப்பட்டு வருகிறது. அதே சமயம், மும்பை அணிக்கு எதிரான அந்த போட்டியில் கடைசியாக களம் இறங்கிய ஒற்றை கையால் சிக்ஸ் அடித்து ரசிகர்களுக்கு உற்சாக விருந்து படைத்தார். இது தொடர்பான வீடியோக்களையும் ரசிகர்கள் வெளியிட்டு 15 ஆண்டு நிறைவை கொண்டாடி வருகின்றனர்.

இப்படியான நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் 2019 ஐபிஎல் இறுதிப் போட்டி குறித்து நினைவுகளை பகிர்ந்து கொள்ள ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹர்பஜன்சிங் மற்றும் மனோஜ் திவாரி பங்கேற்றனர். அப்போது சென்னை அணியின் ஆட்டம் குறித்து நிறைய விஷயங்களை நினைவு கூர்ந்த மனோஜ் திவாரி, “அன்றைய போட்டியில் கடைசியாக களமிறங்கிய தோனி 15 பந்துகளில் 22 ரன்களை சேர்த்தார், அதிலும் அவர் ஒற்றை கையால் அடித்த சிக்ஸ் இன்றும் நினைவில் உள்ளது” என்று தோனியை புகழ்ந்து கூறினார்.

மனோஜ் திவாரி பேசியதை கேட்டதும் ஹர்பஜன்சிங் டென்ஷன் ஆகிவிட்டார். உடனே “அந்த போட்டியில் தோனி எதுவும் ஸ்பெஷலாக செய்துவிடவில்லை” என்று கூறினார். அதைத்தொடர்ந்து பேசியபோது, “மும்பை அணியின் பெல்லார்டு கூட அண்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி பல சிக்ஸர்களை விளாசி இருந்தார். வெறும் ஒற்றை கைகளால் சிக்ஸ் அடிப்பது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. இது எல்லா போட்டிகளிலும் நடப்பது தான்” என்று ஹர்பஜன்சிங் கடுப்பாகி பேசியிருந்தார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் இது குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய விவாதங்களை எழுப்பி வருகின்றனர். இந்த இறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக ஹர்பஜன்சிங் விளையாடியது குறிப்பிடத்தக்கது.