நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் அபாரமாக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஹைதராபாத் அணி, கடைசியாக யாரும் எதிர்பாராத வகையில் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்தது. இது ஹைதராபாத் அணி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
18.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதை அடுத்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய கொல்கத்தா அணி 10.3 ஓவரிலேயே 114 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. ஹைதராபாத் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி வந்து கடைசியில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது காவியா மாறனுக்கு மட்டும் இன்றி அந்த அணி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
இந்தப் போட்டியை நேரில் சென்று பார்த்த காவியா மாறனின் முகம் அந்தக் கணமே வாடி போய்விட்டது. ஹைதராபாத் அணி தோல்வியுற்ற சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கினார். அந்த சமயத்தில், மைதானத்தில் இருந்த கேமராக்கள் காவியா மாறன் பக்கம் திரும்பின. கேமராக்கள் தன் பக்கம் திரும்புவதை அறிந்த காவியா மாறன் முகத்தை திருப்பிக் கொண்டு கண்ணீரை துடைத்தார்.
காவியா மாறன் கண்கலங்கிய இந்த காட்சிகள் சோசியல் மீடியா முழுவதும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏராளமான இணையவாசிகள் கமெண்ட் பாக்ஸில் காவ்யா மாறனுக்கு ஆறுதல் கூறி கருத்து தெரிவித்து வந்தனர். இப்படி, அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் உடைந்து அழுத காவ்யா மாறன், போட்டி முடிந்ததும் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்து அவர்களைப் பாராட்டியதுடன் ஆறுதல் கூறும் வீடியோ இப்போது சோசியல் மீடியாவில் டிரண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில், இதுவரைக்கும் சென்று ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த காவியா மாறன் அணி வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் “நீங்கள் ஒவ்வொருவரும் ஹைதராபாத் அணியை பெருமை கொள்ள செய்துள்ளீர்கள். T20 கிரிக்கெட் ஆடும் ஸ்டைலை மாற்றி உள்ளீர்கள். இந்த சீசனில் ஒவ்வொரு வீரரும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டீர்கள்.
இந்த சீசனில் லட்சக்கணக்கான ரசிகர்கள் நமக்காக வந்தனர். அதற்கு உங்களின் திறமை தான் காரணம். கொல்கத்தா அணி வென்ற போதிலும், நமது ஆட்டத்தின் ஸ்டைலை பாராட்டுகிறார்கள். அனைவருக்கும் நன்றி உடலை பார்த்துக் கொள்ளுங்கள்.. சோகமாக இருக்காதீர்கள் ..” என்று ஐதராபாத் அணி வீரர்களிடையே பேசி உள்ளார். இதற்கு முன்பு காவியா மாறன் வீரர்களை சந்தித்து எவ்வாறு பேசியது கிடையாது. ஆனால் இந்த முறை சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட பின்னர் தனது அணி வீரர்களை சந்தித்து ஊக்கமளிக்கும் வகையில் பேசி இருக்கிறார்.
அதாவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியைத் தழுவியது. இந்த தோல்விக்குப் பிறகு, அந்த அணியின் உரிமையாளரான காவியா மாறன் நேரடியாக ஹைதராபாத் அணி வீரர்களின் ஓய்வறைக்குச் சென்று அவர்களின் திறமையை பாராட்டி ஆறுதல் கூறி ஊக்கப்படுத்தும் வகையில் பேசியது எப்போதும் ஹைதராபாத் அணி தோல்வியடைவதை கண்டு மனம் உடைந்து கண்ணீர் சிந்தும் காவியா மாறன், இந்த முறை சோகத்தை அடக்கிக் கொண்டு வீரர்களுக்கு ஆறுதல் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதை பார்த்து காவ்யா மாறனின் பக்குவத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.