லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மே எட்டாம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் மைதானத்திலேயே அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம் ஆவேசமாக பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சஞ்சீவ் போயங்கா பொதுவெளியில் கைகளை உயர்த்தி கோபத்துடன் கே எல் ராகுலிடம் பேசியதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இந்த சம்பவத்தால் கே எல் ராகுல் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வெகு விரைவில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் லக்னோ சூப்பரர் ஜெயன்ட்ஸ் அணி, கடந்த ரெண்டு சீசன்களிலும் ப்ளே ஆப் சுற்று வரை சென்றிருக்கிறது. ஆனால் நடப்பு சீசனில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆம் இந்த முறை லக்னோவா அணி லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
எனவே, இந்த முறை பிளே ஆப் சுற்றில் விளையாட முடியாது. இதனால் அந்த அணி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கும் நிலையில், சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டன் கே.எல்.ராகுலிடம் கொந்தளித்த காட்சிகள் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 57 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிதானமாக ஆடிய லக்னோ அணி கடைசியாக 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. அதன் பிறகு 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களம் இறங்கியது. ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா கடைசி வரை ஆட்டம் இழக்காமல் வெறும் 9.4 ஓவர்களிலேயே லக்னோ அணியை வீழ்த்தி அபாரமாக போட்டியை முடித்தனர்.
இந்தப் போட்டியை நேரில் பார்த்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கடும் விரக்தி அடைந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் போட்டி முடிந்த சில நிமிடங்களிலேயே கேப்டன் கே எல் ராகுலை மைதானத்தில் வைத்தே அனைவரும் முன்னிலையிலும் அசிங்கப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். சஞ்சீவ் கோயங்காவின் இந்த செயலை பல்வேறு கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்ற நிலையில்,
இந்த சம்பவத்துக்கு பிறகு கே எல் ராகுல் எந்த பயிற்சியிலும் ஈடுபடாமல் யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பதாக அவருடன் நெருங்கிய நட்பில் இருக்கும் கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அவர் மகிழ்ந்த மன உளைச்சலில் இருப்பது போல் தெரிகிறது என்றும் கூறியுள்ளார். இப்படியான சூழலில், அடுத்த ஐபிஎல் சீசனில் கே எல் ராகுல் லக்னோ அணியில் தக்கவைக்கப்படுவது சந்தேகம் தான் என்றும், இந்த சீசனிலேயே கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.அதே சமயம் பிசிசிஐ லக்னோ அணியின் உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.