IPLல் கொல்கத்தா கப் அடிக்க காரணமாக இருந்த 62 வயது நபர்… பக்காவா ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது இவர் தான்..

0
Follow on Google News

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் மென்டார் கௌதம் கம்பீர் ஆகியோர்தான் அணியின் வெற்றிக்கு காரணம் என்று பலரும் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கொல்கத்தா அணியின் உரிமையாளர் சாருக் கான் கூட கௌதம் கம்பீருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தார்.

ஆனால் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பின்னால் பலருக்கும் தெரியாது முகம் ஒன்று இருக்கிறது. ஆம், சந்திரகாந்த் பண்டிட் என்பவர் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு மிகப்பெரிய காரணமாக திகழ்கிறார். யார் இந்த சந்திரகாந்த்? கொல்கத்தா அணியில் அவரின் பங்கு என்ன என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

பொதுவாக கிரிக்கெட் ஆட்டத்தில் அணியில் உள்ள வீரர்களின் ஒருங்கிணைந்த ஆட்டம் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும். அதே சமயம், அணியின் பயிற்சியாளர் போன்ற பல்வேறு முகங்கள் திரைக்குப் பின்னால் இருந்து அணியை சிறப்பாக வழி நடத்துவார்கள். அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்ல முடியாமல் கேப்டன் தடுமாறும் போது, அணியின் பயிற்சியாளர் தக்க சமயத்தில் தேவையான ஆலோசனைகளை வழங்கி வழி நடத்துவார்.

அப்படி ஒருவர் தான் கொல்கத்தா அணியின் கோச் ஆக செயல்பட்டு வருகிறார். அவர்தான் சந்து என்று அழைக்கப்படும் சந்திரகாந்த் சீதாராம் பண்டித். இது ஒரு இந்தியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் 1986 முதல் 1992 வரை 5 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 36 சர்வதேச போட்டிகளில் இந்தியா அணிக்காக விளையாடி இருக்கிறார். அணியில் விக்கெட் கீப்பர் ஆகவும் பேட்ஸ்மேன் ஆகவும் பங்காற்றி இருக்கிறார்.

ஆயுதம் 1987-ல் நடைபெற்ற உலகை கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு அங்கமாக செயல்பட்டு இருக்கிறார். அது மட்டுமில்லாமல் 1988ல் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக குறைவான போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், இவரது கோச்சிங் பயணம் மிகவும் சுவாரசியமானது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சந்திரகாந்த், விதர்பா அணிக்கு கோச்சிங் கொடுக்க ஆரம்பித்தார். இவரது பயிற்சியின் கீழ் விளையாடிய அந்த அணி 2018 மற்றும் 2019 இல் அடுத்தடுத்து ராஞ்ச்சி கோப்பைகளை வென்றது.விதர்பா அணியை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அந்த அணியில் பேர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய பேட்ஸ்மேன்கள் பவுலர்கள் கிடையாது. இதுவரை வெற்றி பெற்றதும் கிடையாது. சுமாராக விளையாடிக் கொண்டிருந்த அணிதான் விதர்பா அணி.

ராஞ்ச்சி போட்டி என்றாலே டெல்லி, மும்பை ஆதிக்கம் தான் இருக்கும். அப்படிப்பட்ட நிலையில், இளம் வீரர்களை மட்டுமே கொண்ட விதர்பா அணிக்கு பயங்கரமாக பயிற்சி அளித்து கோப்பையை வெல்லும் அளவிற்கு மேலே கொண்டு வந்தவர் சந்திரகாந்த். அதல பாதாளத்தில் கிடந்த அணியை ராஞ்சி போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பை வெல்ல வைத்த பெருமை அவரையே சாரும்.

அதேபோல், சந்திரகாந்தின் பயிற்சி மற்றும் ஆலோசனையின் கீழ் விளையாடிய மத்திய பிரதேச அணி 2022 ஆம் ஆண்டு ராஞ்சி கோப்பையை வென்றது. இதையடுத்து கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கொல்கத்தா அணிக்குள் மீண்டும் கெளதம் கம்பிரை கொண்டு வந்து அந்த அணியில் தேவையான மாற்றங்களை செய்து முன்னேற்றக் கொண்டு வந்தது சந்திரகாந்தி தான்.

முக்கியமாக ரிங்கு சிங்கை பாசிட்டிவாக மாற்றியது, ராணாவை மீண்டும் ஃபார்முக்கு கொண்டு வந்தது நரேன் மற்றும் ரசலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி அவர்களது ரோலை சரி செய்தது அனைத்துமே சந்திரகாந்தி தான். கொல்கத்தா அணியில் அவரது பங்கு அளப்பரியாததாக இருந்திருக்கிறது என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.