நீயெல்லாம் எதுக்குமே லாயக்கு இல்லை… உனக்கு என்ன திறமை இருக்கு… ஹர்திக் பாண்டியாவை நார் நாராக கிழித்த இர்பான் பதான்…

0
Follow on Google News

2024 ஐபிஎல் தொடருக்கான டிரேடிங் ஆரம்பித்ததில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கும், ரோகித் சர்மா ரசிகர்களுக்கும் இடையே பெரிய யுத்தமே நடந்துவருகிறது. காரணம், மும்பை அணியின் கேப்டனாக 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய மும்பை அணி, ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ரோகித் சர்மாவிடம் சொல்லிவிட்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று மும்பை அணி தரப்பில் சொல்லப்பட்டாலும், ரோகித் சர்மாவின் தரப்பிலிருந்து அது மறுக்கப்பட்டது. ஒரு சாம்பியன் வீரரின் கேப்டன்சி பதவியை இப்படியான முறையில் பறிக்க கூடாது என்று அதிருப்தியடைந்த ரோகித் சர்மா ரசிகர்கள், மும்பை இந்தியன்ஸ் அணியை UNFOLLOW செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்ந்து ஹர்திக் பாண்டியா மீது ரோகித் சர்மா ரசிகர்கள் வெறுப்பை வெளிப்படுத்திய நிலையில், கேப்டன்சி பதவி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா “என்னை மீறி நடக்கும் செயல்களுக்கு நான் பொறுப்பில்லை” என்று கூறி எரியும் தீயில் எண்ணெயை ஊற்றினார். முடிவில் ரோகித் சர்மா 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் விளையாடமாட்டார் என்று எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அணிக்காக மும்பை அணியில் ஒரு வீரராக ரோகித் சர்மா உயிரைக்கொடுத்து ஆடி வருகிறார்.

மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா வந்த பிறகு அவரது ஆட்டம் தாங்க முடியவில்லை. வீரர்களிடம் நடந்து கொள்ளும் முறை, அவரது செயல்பாடு, கேப்டன் என்ற ஒரு பொறுப்பு இல்லாமல் செயல்பட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் காரணமாக ஹாட்ரிக் தோல்வியை மும்பை இந்தியன்ஸ் சந்தித்தது. அதுமட்டுமின்றி ஹர்திக் பாண்டியா மீது விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்து வீசவில்லை. அந்த போட்டியில் மும்பை வெற்றி பெற்றது. இதே போன்று, ஆர்சிபி அணிக்கு எதிராக ஒரு ஓவர் மட்டுமே வீசினார். அந்த போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான், நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது.

சென்னை இன்னிங்ஸின் கடைசி 4 பந்துகளில் களமிறங்கிய தோனி, ஹர்திக்கின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசி 20 ரன்கள் எடுத்தார். கடைசியில் அதுவே மும்பை தோல்விக்கான வித்தியாசமாகவும் அமைந்தது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்களில் தோல்வியை தழுவியது. இதற்கு காரணமாக தோனி அடித்த அந்த 20 ரன்கள் தான். இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்ஷிப் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, “மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் பந்துவீச்சை மேம்படுத்த முடியும். அவர்களின் கேப்டன் தனது பந்துவீச்சாளர்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும். ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அவருக்கு இரண்டாவது ஓவர் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக அவர் ரச்சின் ரவீந்திராவை ஆட்டமிழக்க செய்தும், ஷிவம் தூபே பேட்டிங் செய்யும் போது ஏன் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி உள்ளது.

அதன்பின் அவரது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச முன்வந்து, தனது முதல் ஓவரிலேயே15 ரன்கள் கொடுத்தார். பிறகு கடைசி ஓவரை வீசும் முறை வந்ததும் அவரே பந்து வீச வந்தார். அவர் ஆகாஷ் மத்வாலுக்கு பந்து வீச ஏன் வாய்ப்பு வழங்கவில்லை. கடந்த ஆண்டு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய மத்வாலிற்கு இந்த முறை ஏன் வாய்ப்பு தரவில்லை. ஒருவேளை அவர் பந்துவீசி இருந்தால் கூடுதலாக 20 ரன்கள் வராமல் இருக்கலாம்” என்று பதான் கூறினார்.