என்னை திட்டமிட்டு காலி செய்ய பார்க்கிறார்கள்.. நானே கேப்டன்சியில் இருந்து விலகி கொள்கிறேன்… ஹர்திக் பாண்டியா எடுத்த திடீர் முடிவு…

0
Follow on Google News

மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் களம் இறங்கிய மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியையே சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சியே காரணம் என்று ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வரும் நிலையில், மும்பை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் அம்பத்தி ராயுடு உள்ளிட்டோர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

2024 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிடம் கொடுக்கப்பட்டது. மும்பை அணி நிர்வாகத்தின் இந்த முடிவு கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக ரோஹித் சர்மா ரசிகர்கள் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிபோனதை தங்கி கொள்ள முடியாமல் ஹர்திக் பாண்டியாவை கண்டபடி விமர்சித்து வந்தனர்.

அதேசமயம், மும்பை அணியின் கேப்டனை மாற்றியதில் ரோகித் சர்மா, பும்ரா, சூர்யா குமார் யாதவ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு துளி அளவும் விருப்பமில்லை என்று அதிக அளவில் பேசப்பட்டு வந்தது. இப்படியான சூழலில் மும்பை அணிக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்தும் ஹர்திக் பாண்டியாவின் மனநிலை குறித்தும் ஹர்பஜன் சிங் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் வெளிப்படையாக பேசியிருக்கின்றனர். இது தொடர்பாக ஹர்பஜன்சிங் கூறுகையில், “மும்பை இந்தியன்ஸ் ட்ரெஸ்ஸிங் ரூமில் நடப்பவை எதுவும் சரியாக இல்லை. அங்கே ஹர்திக் பாண்டியா தனித்து விடப்பட்டிருக்கிறார்.

முதலில் மும்பை அணி வீரர்கள் அவரை கேப்டனாக ஏற்க்க வேண்டும். அந்த அணிக்காக விளையாடியவன் என்ற முறையில் நான் சொல்கிறேன். அந்த அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒன்றாக விளையாட வேண்டும். ஆனால் அங்கு நடப்பவை எதுவும் சரியாக இல்லை” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இவரைப் போலவே, அம்பத்தி ராயுடு மும்பை அணி வீரர்களை பற்றி தனது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். குறிப்பாக பும்ரா, ரோகித் சர்மா ஆகியோர் மீது குற்றம் சாட்டி இருக்கிறார். இது பற்றி அம்பத்தி ராயுடு பேசுகையில், “ரோகித் சர்மாவும் பும்ராவும் ஹர்திக் பாண்டியாவை குழப்ப முயற்சிக்கிறார்கள். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தற்செயலானதா என்பது எனக்குத் தெரியாது.

ஆனால் அவரை குழப்பும் வகையில் அணியில் நிறைய பேர் உள்ளனர். டிரஸ்ஸிங் ரூமில் உள்ள பெரிய வீரர்கள் அவரை கேப்டனாக சுதந்திரமாக பணியாற்ற அனுமதிப்பதில்லை. எந்த கேப்டனுக்கும் இது நல்ல சூழ்நிலை இல்லை” என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். இவர்களைப் போலவே நவ் ஜோத் சிங் சித்தும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஹர்திக் மும்பை அணியில் யாருடனும் பேச முடியாமல் இருப்பதால் மனம் உடைந்து சோகமாக இருக்கிறார். அனைவரும் ஒன்றிணைந்து விளையாடும்போதுதான் அணி வெற்றிபெற முடியும் என்பதை மற்ற வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை செய்யாவிட்டால் மும்பை வெற்றி பெறாது. மும்பை அறையில் இருக்கும் ஹர்திக்கின் படங்கள் ஒரு சோகமான கதையைச் சொல்கிறது” என்று மும்பை அணியில் உள்ள பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு மும்பை அணியில் போதிய ஒத்துழைப்பு இல்லை, திட்டமிட்டு காலி செய்ய பார்க்கிறார்கள், இது தொடர்ந்தால் நானே மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன் என தனக்கு மும்பை அணியின் நிர்வாகத்திடம் ஹர்திக் பாண்டியா தெரிவித்ததாக கூறப்படுகிறது.