ஹர்திக் பாண்டியாவை நம்பி மோசம் போன அம்பானி குடும்பத்தினர்… மீண்டும் கேப்டனாகும் ரோஹித் சர்மா.?

0
Follow on Google News

கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்லவில்லை. இதனால் அப்செட் ஆன அம்பானி குடும்பத்தினர் மும்பை அணியின் கேப்டனை மாற்ற முடிவு செய்து குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு கேப்டனாக மாற்றினர். ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை இரண்டு முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மேலும் ஒரு முறை கோப்பையை பெற்று தந்திருக்கிறார்.

இதனாலேயே இந்த முறை ஐபிஎல் தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று முடிவு செய்த மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியின் கேப்டனாக நியமித்தது.
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிக் கொண்டிருந்த பாண்டியா, 2022 ஆம் ஆண்டு மும்பை அணியில் இருந்து வெளியேறி குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.

அடுத்த இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற ஐபிஎல் சீசனிலும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷியால் குஜராத் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது மற்றும் ஒரு முறை கோப்பையை வென்றது. இதனால் மும்பை அணி நிர்வாகத்தின் பார்வை மீண்டும் ஹர்திக் பாண்டியா மீது திரும்பியது. உடனடியாக பல கோடிகளை செலவழித்து ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை அணிக்கே அழைத்து வந்தது.

மேலும் இதுவரை மும்பை அணிக்கு ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து தூக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியை கொடுத்த மும்பை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி ஹர்திக் மீது முழு நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை தூக்கி கொடுத்த மும்பை அணி நிர்வாகத்திற்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் 2024 ஐ பி எல் தொடரில் மும்பை அணி எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. அடுத்தடுத்து தோல்விகளை மும்பை அணி நிர்வாகம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேலும் இந்த தோல்விக்கு காரணம் ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சி தான் என்று கிரிக்கெட் ரசிகர்களும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஒருமுறை கோப்பையை வென்ற கேப்டன் இரண்டு முறை இறுதிப்போட்டி வரை அணியை வழிநடத்திச் சென்ற கேப்டன் என்ற பெருமைக்கெல்லாம் சொந்தக்காரரான ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியை வழிநடத்திச் செல்வதில் திணறி வருகிறார். அப்படி என்றால் குஜராத் அணியின் வெற்றிக்கு காரணம் கார்த்திக் பாண்டியா கிடையாதா? என்று கேள்வி எழுப்பினால், இந்த இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவை குறிப்பிட வேண்டும்.

அவர் மற்ற பயிற்சியாளர்கள் போல திட்டத்தை கேப்டனிடம் கூறி விட்டு போட்டியின் போது பின்னே அமர்ந்து வேடிக்கை பார்ப்பவர் அல்ல. அவர் போட்டியின் போது ஒவ்வொரு பந்து வீச்சுக்கும் திட்டம் தீட்டி எப்படி விளையாட வேண்டும் என்பதை கிரிக்கெட் வீரர்களுக்கு சொல்லிக் கொண்டே இருப்பார். எந்த பந்துவீச்சாளர் எப்போது பந்து வீச வேண்டும், எந்த மாதிரியான பந்துகளை வீச வேண்டும், ஃபீல்டர் எங்கு நிற்க வேண்டும் என்பது வரை அவரே சொல்லி விடுவார்.

இப்படிப்பட்ட பயிற்சியாளரின் உதவியுடனே ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த விஷயத்தை அறிந்திறாத மும்பை அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியா கேப்டன்சி தான் குஜராத் அணியின் வெற்றிக்கு காரணம் என்று நம்பி பல கோடி கொடுத்து ஹர்திக் பாண்டியாவை விலைக்கு வாங்கி ஏமாந்து போய் நிற்கிறது மும்பை அணி உரிமையாளரான அம்பானி குடும்பத்தினர்.