பலத்த அடி வாங்கியும் திருந்தாத ஹர்திக் பாண்டியா… ஓவர் சீன் போட்டு அசிங்கப்பட ஹர்திக் பாண்டியா…

0
Follow on Google News

மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இதுவரை இந்த சீசனில் ஆடிய 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது அந்த அணி. அதுமட்டுமல்லாமல் சீசன் தொடங்குவதற்கு முன்பிருந்தே கேப்டன்சி மாற்றத்தால் ரசிகர்கள் பொங்கி எழுந்திருந்தார்கள். ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆட்டத்தின் போதும் கூட தொடர்ந்து அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அந்த கோஷங்கள் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியிருக்கின்றன. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மும்பை இந்தியன்ஸின் அணியின் பேட்டிங் கோச் கெய்ரன் பொல்லார்ட், காலம் வரும்போது மும்பை ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவின் புகழ் பாடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ச்சியாக ரசிகர்கள் ஹர்திக் மீது அதிருப்தியை தெரிவித்துக்கொண்டிருக்க, அது அவரது ஆட்டத்தையும் பாதிப்பது போல் தெரிகிறது. சென்னைக்கு எதிரான போட்டிக்குப் பிறகு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் கூட இதுபற்றிப் பேசியிருந்தார். “ஹர்திக் பாண்டியா டாஸின் போது ரொம்பவே சிரிக்கிறார். ஆனால், அவர் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கிறார் என்று தெளிவாகத் தெரிகிறது. அது அவரது ஆட்டத்தையும் பாதிக்கிறது. அவர் ஒரு இந்திய வீரர். அவருக்கு இப்படி நடப்பது சரியல்ல” என்று கூறியிருக்கிறார்.

ஹர்திக்கின் பேட்டிங்குமே இந்த சீசனில் பெரும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் மொத்தம் 131 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் அவர். அதுமட்டுமல்லாமல் அவரது ஸ்டிரைக் ரேட்டும் மிகவும் மோசமாக இருக்கிறது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா முக்கிய வீரராக இருக்க காரணமே அவர் அதிரடி பேட்டிங் செய்யும் வேகப் பந்துவீச்சாளர் என்பது தான். ஆல் – ரவுண்டர் என்ற அடையாளத்தின் காரணமாகவே ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம் பெற்று வருகிறார். ஆனால், அவர் 2024 ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் படுமோசமாக செயல்பட்டு வருகிறார்.

இதுவரை நடந்த ஆறு போட்டிகளில் அவர் நான்கு போட்டிகளில் மட்டுமே பந்து வீசி இருக்கிறார். இதுவே ஒரு சிக்கலாக உள்ளது. ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம் பெற்றால் அனைத்து போட்டிகளிலும் நான்கு ஓவர்களும் வீசும் அளவுக்கு திறன் பெற்று இருக்க வேண்டும். ஆனால், பாண்டியா காலில் உள்ள வலியின் காரணமாகவே இரண்டு போட்டிகளில் பந்து வீசவில்லை என கூறப்படுகிறது. அடுத்து பந்துவீச்சில் விக்கெட் வீழ்த்த வேண்டும் அல்லது ரன்களை குறைவாக விட்டுக் கொடுக்க வேண்டும்.

இந்நிலையில் விளையாடும் போதும் தான் ஓவர் சீன் போடுகிறார் ஹர்திக் பாண்டியா என்று பார்த்தால், மக்கள் கூடும் பொது இடங்களிலும் ஓவர் சீன் போட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார் ஹர்திக் பாண்டியா. சமீபத்தில் விமான நிலையம் வந்த ஹர்திக் பாண்டியா, வெறும் உள் பனியன் உடன் வந்து இறங்கி விமான நிலையத்திற்குள் சென்றார்.

இதை பார்த்தவுடன் ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். சாதாரண மனிதர்கள் இதுபோல் உள் பனியன் உடன் வெளியே செல்ல முடியுமா? விமான நிலையத்திற்கு போக முடியுமா? ஆனால் இதுபோல் பிரபலங்கள் மட்டும் எவ்வாறு இது போல் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் பேஷன் என்ற பெயரில் ஹர்திக் பாண்டியா செய்து வருவது மோசமான ஒன்று என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இப்படி தான் ஓவர் சீன் போட்ட ஹர்திக் பாண்டியாவை பொளந்து கட்டு விதத்தில் அவர் வீசிய பந்தை சிக்சார் பறக்க விட்டு டோனி தரமான சம்பவம் செய்தார், ஆனால் பலத்த அடிவாங்கி பட்டும் திருந்தாத ஹர்திக் பாண்டியா இன்னும் ஓவர் சீன் போடுவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.