மோசமாக விளையாடியவருக்கு வாய்ப்பு… நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பில்லை.. தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா.?

0
Follow on Google News

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டி20 உலக கோப்பை தொடர் வருகிற ஜூன் மாதம் இரண்டாம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், பிசிசிஐ தேர்வு குழு உலகக் கோப்பை தொடருக்கான 15 கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட இந்திய அணியின் பட்டியலை கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிட்டது. ரோஹித் சர்மா கேப்டன்ஷியில் களமிறங்கவிருக்கும் இந்த அணியில் ஜடேஜா, பும்ரா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ் போன்ற மூத்த வீரர்களும் சிவம் துபே, சஞ்சு சாம்சன் போன்ற புதுமுக வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிசிசிஐ தேர்வு குழு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட இந்த அணி திருப்திகரமானதாக இல்லை என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் போட்டியில் கடைசியாக களமிறங்கினாலும் அபாரமாக விளையாடி ரண்களை குவிக்கும் ரிங்கு சிங் மற்றும் யார்க்கர் நாயகன் என்று அழைக்கப்படும் நடராஜன் ஆகிய இரண்டு வீரர்களும் இந்த அணியில் இடம் பிடிக்கவில்லை.

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இவர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியில் இடம் பிடிக்காதது ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது குடித்து முன்னால் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்.

அவரைத் தொடர்ந்து நடிகர் சரத்குமார் அவர்களும் நடராஜனை தேர்வு செய்யாதது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கரும் நடராஜன் தேர்வு செய்யாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல் தொடர் இந்தியாவின் முக்கிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகமாக ipl சீசனை கொண்டாடி வரும் வேளையில், பிசிசிஐ தேர்வு குழு ஏப்ரல் 30ஆம் தேதி t20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அப்படி எந்த வீரர்களும் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்பது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

குறிப்பாக, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ரவிச்சந்திர அஸ்வின், தினேஷ் கார்த்திக், நடராஜன், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட தமிழக வீரர்கள் விளையாடி வருகின்றனர். ஆனால் இவர்களில் ஒருவருக்கு கூட டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. முக்கியமாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் நடராஜன் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

யார்க்கர் பந்துகளை வீசி வெற்றியை கைப்பற்றக்கூடிய வல்லமை படைத்தவர் நடராஜன். நல்ல ஃபார்மில் இருக்கும் இவரை இந்திய அணியில் எடுக்காத தேர்வு குழு, பெங்களூரு அணியில் சுமாராக விளையாடும் முகமது சிராஜை தேர்ந்தெடுத்துள்ளது. இதுகுறித்து ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்தியா டுடே பத்திரிகையில் பேசியிருப்பதாவது, “இடது கை வேகப்பந்து வீச்சாளரான டீ நடராஜனை பற்றி நான் அதிகமாக கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அற்புதமாக பந்து வீசி வருகிறார். அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹர்திக் பாண்டியா நாலாவது பவுலராக செயல்படுவார் என்பதாலேயே, தேர்வுக்குழு இந்திய அணியில் நான்கு ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்து இருப்பதாகவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பிசிசிஐ தேர்வு குழு தமிழக வீரர்களை பாரபட்சமாக நடத்துவது தமிழக ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மோசமாக விளையாடியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள பிசிசிஐ தமிழக பிறந்த ஒரே காரணத்திற்காக அணைத்து திறமையும் இருந்தும் நடராஜனை புறக்கணிக்கிறதா என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.