இந்திய அணியின் தேர்வு முறையே தவறு… அதனால் தான் தமிழக வீரர் நடராஜன் புறக்கணிக்கப்பட்டார்.. கொந்தளித்த கவுதம் காம்பிர் ..

0
Follow on Google News

2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்யும் முறை குறித்து அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற கம்பீர், வீரர்களின் ஏரோபிக் சகிப்புத்தன்மை மற்றும் உடற்தகுதி அளவைத் தீர்மானிக்க யோ-யோ டெஸ்ட் தேவையா என்றும் கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இது இப்போது ஏராளமான கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருவதுடன் பெரும் விவாத பொருளாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய சில வருடங்களாக , இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து வீரர்களும் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்திய அணியுடன் பயணிக்க முடியும் என்ற தேர்வு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு கிரிக்கெட் வீரர் NCAவில் பயிற்சி பெற்றுக்கொண்டு யோ யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதாவது, இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு போதுமான ஃபிட்னஸ் உடன் இருக்கிறார்களா என்பதை அறியும் வகையில் இந்த யோ-யோ டெஸ்ட் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடைமுறை விராட் கோலியின் உடற்தகுதியை மையமாகக் கொண்ட கேப்டன் ஆட்சியின் போது இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது “அதிகபட்ச ஏரோபிக் சகிப்புத்தன்மை உடற்பயிற்சி சோதனையாகும்,

இது 20 மீட்டர் இடைவெளியில் வைக்கப்படும் மார்க்கர்களுக்கு இடையே அதிக வேகத்தில் சோர்வடையும் வரை ஓடுவதை சோதனை செய்யும் டெஸ்ட் ஆகும். இந்த ஃபிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெரும் வரை அந்த கிரிக்கெட் வீரரால் இந்திய அணியில் விளையாட முடியாது. அம்பாதி ராயுடு, சர்பராஸ் கான் உள்ளிட்ட வீரர்கள் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததால், சில தொடர்களில் விளையாட முடியாமல் தவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டும். ஆனால் ஃபிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெற்றால் தான் ஃபிட்னஸ் உடன் இருக்கிறார்கள் என்பதை ஏற்க தேவையில்லை. கிரிக்கெட் வீரர்களை அவர்களின் பேட்டிங் பௌலிங் மற்றும் பீலிங் செயல்திறன் வைத்து தான் தேர்வு செய்ய வேண்டும்.

ஏனென்றால் சில வீரர்கள் உடல்ரீதியாக பலம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். சில வீரர்களால் உடற்பயிற்சி கூடத்தில் சிறப்பாக செயல்பட முடியும். அதேபோல் சில வீரர்களால் உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட முடியாது. இவ்வாறு யோ-யோ டெஸ்ட் தேசியத் தேர்வுக்கான அளவுகோலாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் கவலை தெரிவித்த கௌதம் கம்பீர், இது களத்தில் சிறந்து விளங்கும் வீரர்களை நியாயமற்ற முறையில் தண்டிப்பதாகக் கூறினார்.

மேலும் பேசிய கம்பீர், “என்னை பொறுத்தவரை யோ-யோ டெஸ்ட் மூலம் அல்லாமல், ஒரு பயிற்சியாளர் அல்லது ட்ரெய்னர் மூலமாக அந்த வீரர் ஃபிட்டாக இருக்கிறாரா, இல்லையா என்று தெரிந்து கொண்டால் போதுமானதாக இருக்கும். மேலும், மேலும் அவர்களின் உடற்தகுதியில் தொடர்ந்து பணியாற்றுவதும், அவர்களை உடல்ரீதியாகவும் மேம்படுத்துவது பயிற்சியாளரின் பணியாகும்.

யோ-யோ தேர்வில் தேர்ச்சி பெறவில்லை மற்றும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால், அவரை இந்திய அணியில் தேர்வு செய்யாதது நியாயமற்றது என்று நான் நினைக்கிறேன்” இன்று வெளிப்படையாக அவரது கருத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் தேர்வு முறை யோ-யோ டெஸ்ட் முறையின் காரணமாக தான் தமிழக வீரர் நடராஜன் புறக்கணிக்கப்பட்டாரா என்கிற விவாதம் எழுந்துள்ள நிலையில் களத்தில் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து கிரிக்கெட் அணியில் தேர்வு செய்ய வேண்டும், இது ஓன்று மல்யுத்த போட்டி கிடையாது உடல்பயிற்சியை வைத்து தேர்வு செய்ய என்கிற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.