ஐசிசி இந்திய அணிக்கு வெச்ச ஆப்பு…டி20 உலககோப்பையில் என்ட்ரி கொடுக்க இருக்கும் நடராஜன்… இப்ப தெரிகிறதா தமிழனின் பவர்…

0
Follow on Google News

2024 ICC டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த மே மாதம் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தேர்வு குழு வெளியிட்டது. பிசிசிஐ தேர்வு குழுவின் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் கலந்தாலோசித்து வெளியிட்ட இந்த பட்டியலில் சாஹல், குல்தீப் யாதவ் , ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் போன்ற நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த ரோகித் சர்மா இந்திய அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ததற்கான காரணத்தை உலகக் கோப்பை தொடரின் போது தெரிந்து கொள்வீர்கள் என்று கூறியிருந்தார். அதாவது, டி20 உலக கோப்பை தொடர் நடைபெறும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் பிட்ச்கள் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரோகித் சர்மா அவ்வாறு கூறியிருந்தார்.

இப்படியான நிலையில், ரோகித் சர்மாவுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக ஐசிசி கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளது. ஆம், ரோகித் சர்மா எதிர்பார்த்ததைப் போல ஆடுகளங்கள் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாமல், வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றார் போல அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்டு சொல்வதென்றால், சமீபத்தில் இலங்கை தென்னாபிரிக்க அணிகள் மோதிய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வேகப்பந்து வீச்சாளர்கள் மூலம் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சாதாரண பவுலர்கள் கூட வெறித்தனமாக பந்து வீசும் அளவிற்கு கிரவுண்டுகள் இருப்பதாக கூறியிருந்தார். எனவே,.இந்திய அணி உலக கோப்பை தொடரில் வெற்றியை தன் வசப்படுத்த வேண்டும் எனில் வேகப்பந்துவீச்சாளர்களை களம் இறக்குவது தான் சரியான தேர்வாக இருக்கும். அப்படி பார்த்தால் தற்போது இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா,பும்ரா, முகமது சிராஜ், ஹர்ஷ்தீப் சிங் ,சிவம் துபே போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தான் இருக்கின்றனர்.

இவர்களை மட்டுமே வைத்து எதிரணியை வீழ்த்துவது என்பது சற்று கடினமான விஷயம் தான். கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் கேப்டன் ரோஹித் சர்மா தப்பு கணக்கு போட்டு விட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதாவது தமிழக வீரர் நடராஜனை T20 உலக கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது தற்பொழுது இந்தியா அணிக்கு மிக பெரிய சவாலாக அமைத்துள்ளது. அதே சமயம் தற்போது அணியில் உள்ள ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு விட்டதாக கூறி மற்றொரு வேகப்பந்துவீச்சாளரை அணிக்கு கொண்டு வருவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த வகையில் தற்பொழுது இந்திய அணிக்கு வேக பந்து வீச்சாளர் தேவை என்கிற பட்சத்தில், நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது இந்திய அணி. ஆனால் நடராஜன் புல் பார்மில் இருந்தும் அவரை இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்காமல் திட்டமிட்டு புறக்கணித்த தேர்வு குழு, இந்திய தோல்வி அடைந்தாலும் கூட பரவாயில்லை, தமிழக வீரர் நடராஜன் எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்திய அணியில் இடம் பெற்று விட கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியில் உள்ள பவுலர்களை வைத்து இந்தியா வெற்றி பெறுமா, அல்லது வேகபந்துவீச்சாளர்களை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.