இந்திய அணி கேப்டன் பதவிக்கு ஆசைப்பட்ட ஹர்திக் பாண்டியா… கடுமையாக எச்சரித்த ஜெய்ஷா..

0
Follow on Google News

2022ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது. எனவே, 2024 டி20 உலகக் கோப்பை ஹர்திக் பாண்டியாவின் தலைமையில்தான் என கூறப்பட்டு வந்தது. விராட் கோலி, கேஎல் ராகுல், பும்ரா போன்றோரும் சர்வதேச டி20 போட்டியை தொடர்ந்து விளையாடியதில்லை. மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதுதான் அனைத்து சூழல்களையும் மாற்றியிருக்கிறது எனலாம்.

இருப்பினும், ஐபிஎல் தொடரில் மும்பை அணி கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் அவர் சரியாக விளையாடவில்லை. இதனைத் தொடர்ந்து, நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தும் அவர், முதல் போட்டியிலேயே ரோஹித் சர்மாவை பவுண்டரி லைனில் நிற்க வைத்தது மட்டுமல்லாமல், அவரை அங்கும் இங்கும் அழைய வைத்தார். அதுமட்டுமல்ல, களத்தில் வீரர்கள் தவறு செய்யும்போது, தன்னையே அறியாமல், ஆத்திரத்தில் கத்துகிறார்.

இப்படிப்பட்டவருக்கு ஏன் கேப்டன்ஸியை கொடுக்க வேண்டும் என பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸியில் மிகவும் சுமாராகத்தான் இருக்கிறது. பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதம், பீல்டர்களை செட் செய்வது போன்ற விஷயங்களில் அவர் சொதப்பலாகதான் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், 12 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் அணியாக பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டது.

இது, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.‌ இந்த நிலையில் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஹர்திக் பாண்டியா, டி20 அணியின் கேப்டனாக உலக கோப்பையில் செயல்பட வாய்ப்பு உள்ளது. இது மட்டும் நடந்தால் உலக கோப்பையில் அது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பலரும் கூறி வருகின்றனர்.

ஒரு பேச்சுக்கு ரோஹித் சர்மா உலகக்கோப்பை தொடரின் இடையே காயமடைகிறார் என வைத்துக் கொண்டால், அப்போது ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி ஆடும் நிலை ஏற்படும். இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியையே சரியாக வழிநடத்த முடியாமல் திணறும் ஹர்திக் பாண்டியா எப்படி இந்திய அணியை வழி நடத்துவார்? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

2024 டி20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ளது தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஒரு வார இடைவெளியில் உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது அந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஹர்திக் பாண்டியாவை அணியிலேயே சேர்க்கக்கூடாது என்று சிலர் கூறி வந்தனர். 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு மோசமாக இருந்ததே அதற்கு காரணம்.

அவரை வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டராக கருதியை இந்திய அணியில் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. ஆனால் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், அனைத்து வீரர்களும் இனி பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும்.

ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக கடந்த காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் தற்போது வெள்ளை நிற கிரிக்கெட் பந்து தொடர்களில் ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ சார்பாக அவரிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அடுத்த கேப்டன் பதவி வேண்டும் என்றால் உடல் தகுதியை நிரூபிப்பதோடு இனி உள்ளூர் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட வேண்டும். என்று ஜெய்ஷா மறைமுகமான கேப்டன் பதவிக்கு ஆசை படும் ஹர்திக் பாண்டியாவுக்கு முதலில் உள்ளூர் போட்டியில் ஒழுங்கா விளையாடு என எச்சரித்துள்ளதாக பார்க்க படுகிறது.