சோகம் தாங்க முடியல… இந்தியாவை விட்டே வெளியேறிய ஹர்திக் பாண்டியா… ஏன் தீடிரென இந்த முடிவை எடுத்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடந்து முடிந்த 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா, ஜூன் மாதம் தொடங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பே ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அழைத்து வந்தது மும்பை அணி நிர்வாகம். 

ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை பறித்து ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது மும்பை அணி ரசிகர்களுக்கு இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் மும்பை அணி விளையாடிய லீக் போட்டிகளில் எல்லாம் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷியில் சொதப்பியது மட்டும் இல்லாமல், ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேற காரணமாகவும் அமைந்தார்.

இது ஒரு புறம் இருக்க, ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நடாஷாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் ஐபிஎல் தொடரில் படுமோசமாக விளையாடி ரசிகர்களின் கொடுமையான விமர்சனத்திற்கு ஆளாகிய நிலையில், மற்றொரு பக்கம் மனைவி விவாகரத்து என மிகவும் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.

இப்படி எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சனையாக இருப்பதால் அவர் இப்போது மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில், ஜூன் மாத தொடக்கத்தில் 2024 டி20 உலக கோப்பை தொடர் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா விளையாட இருக்கிறார். ஆனால் இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் விளையாட்டில் கவனம் செலுத்துவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்.

இருப்பினும், ஐபிஎல் போட்டிகளில் சொதப்பியது போல மீண்டும் சொதப்பு விடக்கூடாது என்பதற்காக தனது மன அழுத்தத்தை போக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் தனது மன அழுத்தத்தை குறைப்பதற்காக இந்தியாவை விட்டு வெளியேறி வேறு ஒரு நாட்டில் தனிமையாக நேரத்தை செலவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஹர்திக் பாண்டியா எந்த நாட்டிற்கு சென்று இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும், அவர் பிசிசிஐ கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெற்ற வெளிநாட்டில் சென்று தங்கி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அவரால் அவ்வளவு எளிதாக மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர முடியுமா? இத்தகைய நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் அவசியம் இந்த தொடரில் விளையாட வேண்டுமா என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், ஐபிஎல் தொடரில் சொதப்பி கோட்டை விட்டதை, மீண்டும் இழுத்துப் பிடிக்க டி20 உலக கோப்பை தொடர்தான் சரியான வாய்ப்பு என்றும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.