ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றுங்கள்… இல்லை நாங்கள் வெளியிருக்கிறோம்… ரோஹித், புர்மா, சூர்யா குமார் மும்பை அணிக்கு கொடுத்த கெடு…

0
Follow on Google News

கடந்த மே 6 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 55 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் சுழன்று சுழன்று அடித்து சென்சுரி அடித்தார். கடைசி வரை ஆட்டமில்லக்காமல் ஆடிய சூரியகுமார் யாதவ் 51 பந்துகளில் 102 ரன்கள் அடித்து மும்பை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இவ்வாறு வெறித்தனமாக விளையாடி நல்ல பார்மில் இருந்து வரும் சூரியகுமார் யாதவ் மும்பை அணி நிர்வாகம் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு மும்பை அணியில் இருந்து விலகி வேறொரு அணியில் சேர போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மே 6ஆம் தேதி நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடியிருந்தார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி நான்காவது வெற்றியை பெற்றிருக்கிறது. ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் நீண்ட நாட்களாக பத்தாவது இடத்தில் இருந்த மும்பை அணி சூரியகுமாரின் அதிரடி ஆட்டத்தால் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சூர்யகுமார் யாதவ் என்று மும்பை அணி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏனென்றால், மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ரோகித் சர்மா, இஷான் கிஷான் இருவரும் சுமாராக விளையாடி வருகின்ற நிலையில், மிடில் ஆர்டரில் இருக்கும் சூரியகுமார் யாதவ் ஃபுல் ஃபார்மில் எனர்ஜியோடு விளையாடி வருவது அந்த அணிக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இருப்பினும் சூரியகுமார் யாதவிடம் அந்த மகிழ்ச்சி இல்லை என்று கூறப்படுகிறது.

அதற்கு காரணம் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியின் கேப்டனாக நியமித்தது தான். மும்பை அணி நிர்வாகம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்து ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. மும்பை அணியை நிர்வாகத்தின் இந்த முடிவு ரோஹித் சர்மா உட்பட ஜஸ்ரீத் பும்ரா சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கும் பிடிக்கவில்லை. பும்ரா, சூரியகுமார் யாதவ் இருவரும் ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பதையே விரும்பினர். சொல்லப்போனால் இருவரும் கேப்டன் மாற்றத்திற்கு வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

மும்பை அணி நிர்வாகம் கேப்டனை மாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தால், நீண்ட நாட்களாக அந்த அணிக்காக விளையாடி வரும் தங்கள் இருவரில் யாரையேனும் நியமித்திருக்கலாமே என்பதுதான் சூரியகுமாரின் ஆதங்கம். ஆனால் அதை விட்டுவிட்டு பணத்துக்காக மும்பை அணியை விட்டு வெளியேறிய ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அவர் கேட்கும் பணத்தை கொடுத்து அழைத்து வந்திருப்பது எங்களுடைய விசுவாசத்தின் மதிப்பை இழக்க செய்திருக்கிறது என்றும் கருதுகிறார்.

இதனாலேயே சூர்யா குமார் மும்பை அணியை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் உம்ரா ரோஹித் சர்மா ஆகியோரும் இதே முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அவ்வாறு மும்பை அணியை விட்டு வெளியேறினால், அடுத்த ஐபிஎல் தொடரில் சூரியகுமார் யாதவ் கொல்கத்தா அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏனெனில் ஏற்கனவே கொல்கத்தா அணியில் விளையாடிக் கொண்டிருந்த சூரியகுமார் யாதவ் தற்போது மும்பை அணியில் விளையாடி வருகிறார். ஆனால் மும்பை அணி நிர்வாகம் அவரது விசுவாசத்திற்கு ஏற்ற மரியாதையை வழங்கவில்லை. இதனால் மீண்டும் கொல்கத்தா அணிக்கு செல்லும் முடிவில் இருப்பதாகவும் அதற்கு அந்த அணி நிர்வாகம் க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.