இந்தியர்களை இழிவு படுத்தும் உனக்கெல்லம் நன்றி இருக்கா.? கிழித்து தொங்க போட்ட ஹர்பஜன் சிங்… மன்னிப்பு கேட்ட பாக்கிஸ்தான் வீரர்…

0
Follow on Google News

நடப்பு T20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போது, கமெண்ட்ரியில் உட்கார்ந்து போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் இந்திய அணி வீரர் அர்ஷ்தீப் சிங் குறித்து பேசிய பேச்சு மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மைதானத்தில் கிரிக்கெட் ஆட்டத்தின் போக்கு எப்படி இருக்கிறது, வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள், சிக்ஸர் அடித்தால் அதற்கேற்ற வர்ணனை என்று கமெண்ட்ரி செய்த காலம் போயி, கிரிக்கெட் வீரர்களை இழிவாக பேசுவது, அவர்களின் தோற்றத்தை வைத்து உருவ கேலி செய்வது என வர்ணனையாளர்கள் புது விதமாக கமெண்ட்ரி செய்து வருகின்றனர்.

இவ்வாறு மோசமான கமெண்டரிகளுக்கு எதிராக அவ்வப்போது புகார்கள் வந்தாலும், கிரிக்கெட் கமெண்ட்ரியில் உட்கார்ந்து என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற அவல நிலை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில், டி20 உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது.

அந்த கடைசி ஓவரை இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷிதீப் சிங் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது கமெண்டரியில் இருந்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல், “இப்போது மணி 12 ஆகிவிட்டது 12 மணிக்கு மேல் சீக்கியர்கள் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். எனவே இப்போது ஹர்ஷிதீப் சிங் பவுலிங் செய்தால் பாகிஸ்தான் அணி எளிதாக ரன்னடித்து வெற்றி பெற்று விடலாம்” என்று ஏளனமாக பேசியிருக்கிறார்.

அவர் கூறிய 12 மணி என்பது, இந்தியாவில் முகலாய மன்னரான அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் சீக்கியர்கள் நடத்திய ராணுவ தாக்குதல் வரலாறு ஆகும். அதாவது அந்த காலகட்டத்தில் அவுரங்கசீப் இந்திய பெண்களை கடத்தி சிறையில் அடைத்திருந்தார். அப்போது அந்த பெண்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்பதற்காக, சீக்கியர்கள் ஒன்று கூடி ஒரு படையை உருவாக்கி இரவு நேரங்களில் அவுரங்கசீப்பின் படையை தாண்டி பெண்களை மீட்டுக் கொண்டு வந்தார்கள்.

எனவே அந்த காலத்தில் இருந்து 12 மணி ஆகிவிட்டால் சீக்கியர்கள் படையெடுப்பார்கள் என்று சொலவாடை உருவானது. இது காலப்போக்கில் மருவி சீக்கியர்களை கிண்டல் செய்யும் விஷயமாக மாறிப்போனது. இப்போது அதையேதான் கமெண்டரியிலிருந்து கம்ரான் அக்மல் செய்து இருக்கிறார். அதைக் கேட்டதும் கொந்தளித்த ஹர்பஜன் சிங், “சீக்கியர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் வரலாறு தெரியாமல் எதுவும் பேசக்கூடாது.

அவர்கள் தான் உங்கள் தாய் மற்றும் சகோதரிகளையும் முகலாய மன்னர்களிடம் இருந்து காப்பாற்றினார்கள். கொஞ்சமாவது நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் சோசியல் மீடியா முழுவதும் ட்ரெண்டாகி பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. இதைக் கவனித்த கம்ரான், தனது சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நான் கூறிய வார்த்தைகளுக்காக ஹர்பஜன்சிங் மற்றும் சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.எனது வார்த்தைகள் சரியானவை அல்ல. அவை மரியாதை குறைவாக இருந்தது. நான் உலகம் முழுவதும் இருக்கும் சீக்கியர்கள் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். யாரையும் காயப்படுத்தும் நோக்கில் நான் அதைக் கூறவில்லை. இதற்காக நான் உண்மையில் மிகவும் வருந்துகிறேன்” என்று கூறியிருந்தார்.