எதிராளிக்கு மரணபயத்தை விதைத்த தோனி…தோனியை தவிர யாருமே செய்ய முடியாத Goosebumps moment வரலாறு..

0
Follow on Google News

2013 சாம்பியன்ஸ் டிராபி பைனல்ல டாஸ்ல இந்தியா தோக்க சோதனை ஆரம்பமாச்சு, இந்தியா கொடுத்த டார்கெட் வெறும் 129 ரன்கள். பில்டிங் இறங்கிறதுக்கு முன்னாடி வீரர்களுக்கு தோனி சொன்ன அறிவுரை “God is not coming to save us” நம்ம தான் போராடி ஜெயிக்கனுமுனு பேசி உள்ளே அழைத்து செல்கிறார் தோனி. 2007 உலக கோப்பையில் எப்படி ஜோகிந்தர் ஷர்மானா, 2013க்கு இஷாந்த் ஷர்மா .

இஷாந்த் சர்மா ஏற்கனவே 15வது ஓவரில் ரன்களை வாரி இறைக்க அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் 18வது ஓவரை அவர் கைகளில் கொடுத்து அதிசயத்தை நிகழ வைத்தார் தோனி. இந்தியா வெறும் 3 ரன்களுக்கு 4 விக்கெட்கள் எடுத்து இறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

9 விக்கெட் போயிருக்கும் கூட டெய்ல் எண்டர் தான் நிற்கும் தோனி கொஞ்சம்கூட பொருட்படுத்தாம லாங்ல அடிச்சுட்டு ஓடாம நிப்பார் . அப்படி அவர் நிக்கும்போதெல்லாம் டிவி கேமரா எதிர் டீம் கேப்டன தான் focus பண்ணும். அவனுக முகத்துல மரணபயம் இருக்கும் அந்த பயம்தான் தோனி வெதச்சது. 2012 கடைசி ஓவர்ல ஆஸி கூட 4 பால்க்கு 12 ரன் தேவை இருக்கும்போது mcgay பால்ல அடிச்ச 112m சிக்ஸ் யாரும் மறக்க முடியாது.

விக்கெட் கீப்பிங்ல தோனிய அடிச்சுக்க இப்ப வரைக்கும் எவனும் பிறக்கலன்னு தான் சொல்லலாம் . கண் இமைக்குற நேரத்துல அடிக்குற stumping a இருக்கட்டும் டைவ் அடிச்சு பிடிக்குற கேட்சா இருக்கட்டும்
Reverseல த்ரோ பண்ணி ரன் அவுட் ஆக்குறதா இருக்கட்டும் பேட்ஸ்மேன் மைண்ட்ட ரீட் பண்ணி அடுத்து எப்படி அடிக்க போறான் அவனுக்கு எப்படி பவுலிங் போடணும்னு spinnersக்கு சொல்லுற instruction a இருக்கட்டும் தோனிக்கு நிகர் தோனி தான்.

2016 T20 உலகக்கோப்பை பங்களாதேஷ் கூட நடந்த மேட்ச்ல கடைசி பால் தோனிக்கு இருந்த presence of mind மாதிரி உலகத்தில் வேற எந்த ஒரு கேப்டன்க்கும் இருக்காதுன்னு அடிச்சு சொல்லலாம் . அன்னிக்கு அவர் ஓடி வந்து அடிச்ச ரன் அவுட் பங்களாதேஷ் இதயங்களை துளைத்து இந்திய இதயங்களில் விடிவெள்ளியாய் முளைத்தது. ரன் அடிச்சுட்டு ஓடிவரும்போது அத தடுக்குற மாதிரி வந்த கடுப்பேத்துன பங்களாதேஷ் பிளேயர் முஸ்தபிஸுர இடிச்சு தள்ளினது எல்லாம் Thug life Dhoni moments

ஐபில்ல பொல்லார்ட்க்கு straight mid-off and straight long-off combo field set பண்ணது எல்லாம் யாரும் கனவுலயும் நினைச்சு பாக்காதது . இஷாந்த் சர்மாவை லார்ட்ஸ்ல தொடர்ந்து short பால் போட வைச்சு இங்கிலாந்து கூட 7 விக்கெட் எடுத்தது எல்லாம் rare piece மொமெண்ட்கள் . 2019 ஐபில்ல ராஜஸ்தான் ராயல்ஸ் மேட்ச்ல அம்பயர் நோ பால் கொடுக்கிறாப்ல கைய தூக்கி இறக்குனத்துக்கு தோனி உள்ள வந்து சண்டை போடுவார் பாருங்க Goosebumps moment for entire cricket fans.

ரோஹித் சர்மாவை ஒப்பனிங் இறக்குற முடிவை எடுத்தது, கோலியை கஷ்டமான காலங்கள Protect பண்ணியது , புவி ,அஸ்வின் ,ஜடேஜா ,ரெய்னா ,தவான் ,பாண்டியா , சாமி என பல உலகத்தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்கியது என தோனி இந்திய கிரிக்கெட்க்கு அளித்த கொடைகள் ஏராளம். வெற்றியை பகிர்வதும் தோல்வியை தன் தோளில் மட்டும் சுமப்பது மட்டுமே ஒரு தலைவனின் சிறந்த தகுதி. அதை தான் கேப்டனாக இருந்த காலம் முழுவதும் செய்தவர் தோனி.

அதே நேரத்தில் உதிக்கும் போது மறையும் போதும் ரசிக்கும் உலகம், உச்சிக்கு வந்தால் தீட்டிதிர்க்கும் சூரியனை மட்டும் அல்ல மனிதனின் வளர்ச்சியையும் தான். தோனி மட்டும் என்ன விதி விலக்கா அவரையும் வசை பாடிய வாய்களும் உண்டு, ஆனால் அவர் எக்காலத்திலும் அதை பொருட்படுத்தியதும் இல்லை, இந்நிலையில் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் சகாப்தம் என்றால் அது மிகையாகாது, Thug life Dhoni moments இது போன்ற பல சம்பவங்கள் உண்டு, அப்படி உங்களை கவர்ந்த டோனியின் Goosebumps moment களை கமெண்ட் செய்யுங்கள்.