கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 2024 ஐ பி எல் தொடர் இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் 14 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த சென்னை அணி சனிக்கிழமை சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணிந்த சீசன் இல் ப்ளே ஆஃப் இருக்கு தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.
இது சென்னை அணி ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. மற்றொரு பக்கம், இந்த ஐபிஎல் சீசன் தான் தோனியின் கடைசி ஐபிஎல் என்று எதிர்பார்க்கப்படுவதால் தோனி ரசிகர்களும் கலக்கமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கும் போதே கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி ருத்ராஜ் கெய்க்வாட்டை சென்னை அணியின் புதிய கேப்டனாக நியமித்தார். இதனால் இந்த ஐபிஎல் சீசனுடன் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
இருப்பினும் சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா போன்ற தோனிக்கு நெருக்கமான கிரிக்கெட் வீரர்கள் தோனி 2025 ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என்று கூறி வருகின்றனர். இது தோனி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.இதற்கிடையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தோனி ரசிகர்களை சீண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருக்கிறார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர் ஆகவும் பேட்ஸ்மேன் ஆகவும் விளையாடி வரும் தோனி, மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மேலும் பெரும்பாலான போட்டிகளில் தோனி கடைசியாக களமிறங்குவதால் குறைவான பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு இருக்கிறார். அதாவது 14 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 73 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ளார்.
தோனி இனிமேல் இப்படி குறைந்த பந்துகளை மட்டும் தான் சந்திக்க போகிறார் என்றால் அவரை அணியை விட்டு தூக்க வேண்டும், இதன் மூலம் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்படும் மிகப்பெரிய தொகை மிச்சமாகும் என்று இர்பான் பதான் காட்டமாக பேசியுள்ளார். இதுகுறித்து இர்ஃபான் பதான் பேசுகையில், வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனியை சென்னை அணியின் தக்க வைக்க வேண்டும் என்றால் அந்த அணி நிர்வாகம் மிகப்பெரிய தொகையை அவருக்கு சம்பளமாக கொடுக்க வேண்டி இருக்கும்.
என்னை பொருத்தமட்டில் நீண்ட கால அடிப்படையில் சென்னை அணி தோனியை தக்க வைக்க கூடாது. மேலும் இந்த சீசனில் தோனி விளையாடியது போல, ஒவ்வொரு போட்டியிலும் மூன்று அல்லது நான்கு பண்புகளை மட்டும் தான் எதிர்கொள்ளப் போகிறார் என்றால் அவரை சென்னை அணியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில் மூன்று அல்லது நான்கு ஓவர்களுக்கு பேட்டிங் செய்வதாக தோனி ஒப்புக்கொள்ள வேண்டும். ” என்று தனது கருத்தை முன் வைத்துள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வீரர்கள் தான் அணிக்கு தேவை ரசிகர்களுக்காக விளையாடும் வீரர்கள் தேவை இல்லை, தோனி ரசிகர்களுக்காக இரண்டு மூன்று பந்துகள் விளையாடி வருகிறார் என்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று இர்ஃபான் பதான் கடுமையாக பேசியுள்ளார் இர்பான் பதான்.