சிஎஸ்கே தோல்விக்கு காரணமே தோனி தான்… பெங்களூர் வெற்றிக்கு தோனி மறைமுகமாக செய்து உதவி…

0
Follow on Google News

கடந்த சனிக்கிழமை சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படு தோல்வி அடைந்தது. இது தற்போது இணையம் முழுவதும் பெரிதளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் ஏழு போட்டிகளில் வென்று 14 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்களை கூட எடுக்க முடியாமல் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் கடைசியாக களம் இறங்கிய தோனி தான் சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் விமர்சகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இது தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த மே 18ஆம் தேதி அன்று சனிக்கிழமை சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 68 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த சென்னை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்று விடும் என்பதால் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வலுத்திருந்தது. ஆனால் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. அன்றைய போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் தோனி அடித்த ஒரு சிக்ச்சர் தான் என்று கிரிக்கெட் விமர்சகர் ஒருவர் இணையத்தில் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது பெங்களூர் அணிக்கு எதிரான அன்றைய போட்டியில் நேரம் செல்ல செல்ல அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டது. பனிப்பொழிவின் விளைவாக பந்துகளில் ஈரப்பதம் ஏற்படவே, பெங்களூர் அணியை சேர்ந்த பவுலர்களால் பந்தை சரியாக பிடிக்க முடியவில்லை. ஈரமான பந்தை தோனி போன்ற வீரர்களுக்கு வீசினால், எளிதாக சிக்ஸ் அடித்து ரண்களை குவிப்பார்கள். அப்படி இருக்கையில், சென்னை இனி எப்படி தோல்வி அடைந்தது என்பதை பற்றி விரிவாக விவரித்துள்ளார் அந்த கிரிக்கெட் விமர்சகர்.

சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் கடைசி ஓவரில் களம் இறங்கிய தோனி, யாஸ் டயாலின் பந்துவீச்சை எதிர்கொண்டார். யாஷ் தயால் வீசிய முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்க விட்டு கெத்து காட்டினார் தோனி. தோனி அடித்த பந்து 110 மீட்டர் உயரம் வரை சென்றது. மைதானத்தில் பார்வையாளர்களின் மாடத்தின் உச்சிக்குச் சென்ற பந்து காணாமல் போய்விட்டது. இதனால் வேறுபந்து மாற்றப்பட்டது.

இதுதான் போட்டியின் திருப்புமுனைக்கு முக்கிய காரணம் என்று கிரிக்கெட் விமர்சகர் கூறியுள்ளார்.
அதாவது பனிப்பொழிவினால் பந்து ஈரமாக இருந்தபோது, ஆர்சி பியால் சரியாக செயல்பட முடியவில்லை. ஆனால் தோனி அடித்த அந்த சிக்ஸருக்கு பிறகு வேறு பந்து மாற்றப்பட்டதால், அந்தப் பந்து காய்ந்த நிலையில் இருந்ததால் யாஷ் தயாள் சிறப்பாக பந்து வீசி சென்னை அணியை நெருக்கடிக்கு ஆளாக்கியதாக கிரிக்கெட் விமர்சகர் தெரிவித்துள்ளார்.

ஈரமான பந்தில் பந்து வீசுவது கடினம். தோனி அடித்த சிக்ஸரில் பந்து காணாமல் போனதால், வேறு பந்து கிடைத்ததை வைத்து யாஷ் தயாள் சரியான வேகத்தில் பந்து வீசினார். இதனால் தான் தோனி அடித்த அடுத்த பந்து எளிதாக கேட்ச் பிடிக்கப் பட்டது. அதேபோல் ஜடேஜா கூட பந்தய அடிக்க முடியாமல் திணறினார். தோனி மட்டும் அந்த சிக்சர் அடிக்காமல் இருந்தால் பெங்களூர் அணி பந்து வீச முடியாமல் தடுமாறி தோல்வி அடைந்திருக்கும் என்று அந்த விமர்சகர் கூறியுள்ளார்.