கோலிக்கு இருக்க கூடிய புத்திசாலித்தனம் தோனிக்கு இல்லை… அப்படியானால் கூல் கேப்டன் என்று சொல்வதெல்லாம்..

0
Follow on Google News

தமிழ்நாட்டில் அதிக அளவிலான ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மகேந்திர சிங் தோனி. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனி மீது ரசிகர்கள் கொண்டுள்ள அன்பும் மரியாதையும் அளப்பரியாதது. இப்படியான நிலையில், இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் விராட் கோலி உடன் தோனியை ஒப்பிட்டு பேசியது தோனி ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

யார் அந்த இளம் கிரிக்கெட் வீரர் அவர் தோனி குடித்து என்ன கூறியிருக்கிறார் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம். கடந்த 2023 முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் நிதீஷ் குமார் ரெட்டி. நடந்து முடிந்த 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கூட சிறந்த ஆல்ரவுண்டராக விளையாடி அசத்தியிருந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் இவர் இந்த ஐபிஎல் சீசனில் 303 ரன்கள் மற்றும் மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் இளம் டிக்கெட் வீரர்களில் ஒருவரான நிதிஷ்குமார் ரெட்டி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் விராட் கோலியுடன் தோனியை ஒப்பிட்டு பேசியிருந்தார். இது தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக சென்னை அணி ரசிகர்கள் அவர் தோனியை மட்டம் தட்டி பேசி இருக்கிறார் என்றும், தோனியின் கிரிக்கெட் திறமை குறித்து குறைவாக மதிப்பிட்டு பேசி இருக்கிறார் என்றும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தோனியை தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அவரது சிறப்பான கேப்டன்சி, மற்றும் அவர் கூலாக எடுக்கும் முடிவு என அனைத்தும் ஏராளமான ரசிகர்களை அவர் பக்கம் கவர்ந்து இழுத்து உள்ளது. குறிப்பாக, தோனி பேட்டிங் செய்ய ஸ்டேடியத்திற்குள் நுழைந்து விட்டாலே மைதானத்தில் இருக்கும் 75% ரசிகர்கள் தோனியின் பெயரை உச்சரித்து ஆரவாரம் செய்வதை பார்க்க முடியும். அந்த அளவிற்கு வெறித்தனமான தீவிரமான ரசிகர்கள் தோனிக்கு உண்டு.

அப்படி இருக்கையில், இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் தோனி குறித்தும் அவரது கிரிக்கெட் திறமை குறித்தும் விமர்சித்திருப்பது அவரது ரசிகர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த நிதீஷ் குமார் ரெட்டி, “மகேந்திர சிங் தோனிக்கு கிரிக்கெட்டில் திறமை உண்டு ஆனால் விராட் கோலி இடம் இருக்கும் அளவிற்கு டெக்னிக் இல்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

விராட் கோலியுடன் கம்பேர் செய்து, தோனி மோசமான பேட்ஸ்மேன் என்று குறிப்பிடுவது போல அவர் பேசி இருந்தது தோனி ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது. இதனால் ஏராளமான தோனி ரசிகர்கள் நிதீஷ்குமார் ரெட்டிக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். சோசியல் மீடியா முழுவதும் நிதீஷ்குமார் ரெட்டியை ரோஸ்ட் செய்து கமெண்ட் செய்து வந்ததையடுத்து, அவர் அளித்த பேட்டி குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக நிதீஷ் குமார் பேசுகையில், “நான் மகி பாய் இன் மிகப்பெரிய ரசிகன். என்னிடம் கிரிக்கெட்டிற்கு திறமை முக்கியமா, மனநிலை முக்கியமா என்று அந்த பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நான் மனநிலை தான் முக்கியம் என்று பதில் அளித்தேன். அப்போது அதற்கு உதாரணமாக தோனியை கூறினேன். கிரிக்கெட் போட்டியில் வெற்றியை தீர்மானிப்பதில் மனநிலை முக்கிய பங்கு வைப்பதாக நினைக்கிறேன். நான் பேட்டியில் முழுமையாக பேசியதை வெளியிடாமல் எடிட்டிங் செய்து கத்தரித்து வெளியிட்டு இருக்கிறார்கள். முழுமையாக தெரியாமல் தவறான விஷயங்களை பகிர வேண்டாம்” என்று கூறி இருக்கிறார்.