இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. ஆனால் மே 18ஆம் தேதி நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் போட்டியுடன் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இது சென்னை அணி ரசிகர்களை பெரும் துயரில் ஆழ்த்தியது.
ஒரு பக்கம் இணையம் முழுவதும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் தோனி தனது ஓய்வே அறிவிப்பார் என்ன செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஒருவேளை இந்த சீசன் உடன் தோனி ஐபிஎல் இல் விளையாடுவதை நிறுத்திவிட்டால் சென்னை அணியின் நிலைமை என்னவாகும்? இதை ஏராளமான சென்னை அணி ரசிகர்கள் யோசித்து இருப்பார்கள்.
தற்பொழுது இது குறித்து தான் விரேந்திர சேவாக் தனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். தோனியின் ஓய்வு குறித்து வீரேந்திர சேவாக் ஒரு பேட்டியில் பேசுகையில், “தோனி ஓய்வை அறிவித்து விட்டால் சென்னை அணியின் ரசிகர் கூட்டம் குறைந்துவிடும். மேலும் மற்ற மைதானங்களில் நடக்கும் சென்னை அணியின் போட்டிகளை பார்ப்பதற்காக ஆவலுடன் ரசிகர்கள் வர மாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், நாம் கடந்த மூன்று வருடங்களாக தோனியின் ஓய்வு குறித்து விவாதித்து வருகிறோம். ஆனால் அவர் தொடர்ந்து ஒவ்வொரு சீசனிலும் விளையாடிய நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். என்னை பொருத்தவரை அவர் ஏற்கனவே கடைசி தொடரில் ஆடிவிட்டார். தற்போது தோனிக்கு 42 வயதாகிறது. இந்நிலையில் அவர் இன்னும் ஒரு ஐபிஎல் தொடரில் விளையாடுவது என்பது கடினம் தான்.
அடுத்த வருடம் அவருக்கு 43 வயது ஆகிவிடும். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு விரைவில் காயம் இருந்தால் கூட அவரது வயதின் காரணமாக முகத்தில் வெளிப்படையாக தெரிந்து விடும்” என்று ஷேவாக் தோனி குறித்து பேசி உள்ளார். மேலும் அவர் தொடர்ந்து பேசும் போது, “சென்னை அணியின் ரசிகர் பட்டாளம் மிகவும் பெரியது. சென்னை அணிக்கு ஏராளமான ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவு கிடைக்கிறது என்றால் அதற்கு தோனி தான் காரணம்.
சனிக்கிழமை பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கூட மஞ்சள் நிற ஆடையில் ரசிகர்களின் கூட்டம் அலைகடல் என ஆர்ப்பரித்ததை பார்த்தோம். ரசிகர்களின் இப்படிப்பட்ட பெரிய ஆதரவு தோனி ஓய்வை அறிவித்து விட்டால் சென்னை அணிக்கு கிடைக்காது. தோனிக்கு பிறகு சென்னை அணியின் ரசிகர் கூட்டம் பெரிய அளவில் குறைந்துவிடும். இப்போது சென்னை அணி விளையாடும் போட்டிகள் அனைத்தையும் ஊரோராக சென்று பார்க்கும் ரசிகர்கள் தோனி ஓய்வை அறிவித்த பிறகு அப்படி சென்று பார்க்க மாட்டார்கள்” என்று சேவாக் கூறியுள்ளார்.
இந்நிலையில் 2024 ஐ பி எல் சீசனுக்கு பிறகு சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் “தோனிக்குப் பிறகு சென்னை அணியின் ரசிகர்கள் வெகுவாக குறைந்து விடுவார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ள வீரேந்திர சேவாக்கின் இந்த கூற்று சென்னை அணி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. மேலும் தோனி குறித்தும் தோனியின் ரசிகர் பட்டாளம் குறித்தும் சேவக் கூடிய இருப்பது குறித்து நீங்கள் என நினைக்கிறீர்கள் என்பதை இங்கே பதிவிடுங்கள்.