தோனி செய்த தில்லாலங்கடி… நம்பி ஏமார்ந்த ரோஹித் சர்மா… இனி இந்த பக்கமே வராத… சிவம் துபேவை விரட்டி அடிக்கும் இந்திய அணி…

0
Follow on Google News

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு நாடுகளிலும் 2024 ஐசிசி t20 ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பிசிசிஐ தேர்வு குழு மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணியில் பல்வேறு இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய சிவம் துபேவும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கி அபாரமாக விளையாடிய சிவம் துபே, t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பயங்கரமாக சொதப்பி வருவதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த கிரிக்கெட் வீரருக்கு நிச்சயமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வலர்களும் பரிந்துரைத்த பெயரில் ஒன்றுதான் சிவம் துபே. ஏனெனில் இவர் முன்னால் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் போல் இடது கை பேட்ஸ்மேன் ஆவார், மேலும் இடது கையில் சிக்ஸ் மற்றும் பவுண்டரிகளை பறக்க விட்டு ரன்களைக் குவிக்கும் திறமை படைத்தவர்.

அது மட்டும் இல்லாமல், மிக வேகப்பந்து வீச்சாளர் என்பதால், விக்கெட்டுகளை வீழ்த்துவதில் பட்டையை கிளப்புவார். இதற்கு முன்பு நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியில் விளையாடிய இவர், ரன்கள் விறுவிறுவென உயர காரணமாக இருந்தார். ஐபிஎல் தொடரில் சிவம் துபேவின் மிரட்டலான ஆட்டத்தை பார்த்து அசந்து போன பிசிசிஐ தேர்வு குழு, இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அவரது பெயரை தேர்வு செய்தது.

அதே சமயம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சிவம் துபேவை இந்திய அணியில் தேர்வு செய்ததற்கு வரவேற்பு தெரிவித்தனர். இவ்வாறு இந்திய அணியும் கிரிக்கெட் ரசிகர்களும் சிவம் துபே மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த நிலையில், சிவம் துபைவுக்கு இந்தத் துறையில் மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது என்பது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது அம்பலமாகி இருக்கிறது.

ஆம், சிவம் துபே பேட்ஸ்மேன் ஆக அதிரடி காட்டினாலும் ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் பந்து வீசவில்லை. இருப்பினும் தேவைப்படும் நேரத்தில் இரண்டு ஓவர்கள் பந்து வீசினால் போதும் என்ற பாணியில்தான் ரோஹித் சர்மா சிவந்துபேவை இந்திய அணிக்கு கொண்டு வந்திருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது தான் சிவம் துபேவின் பலவீனம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை மட்டுமில்லாமல் கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நடந்து முடிந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது, பாகிஸ்தான் அணி வீரர்கள் அதிரடியாக ஆட முற்பட்டனர். அந்த சமயத்தில் ஃபீல்டிங்கில் நின்று கொண்டிருந்த சிவம் துபே பாகிஸ்தான் வீரர்கள் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முடியாமல் தவறவிட்டார். அப்போதுதான் சிவம் துபே பில்டிங்கில் சொதப்புவார் என்ற உண்மை தெரிய வந்தது.

மேலும் இதன் காரணமாக தான் சென்னை அணி நிர்வாகம் அவரை வெறும் பேட்டிங் இருக்க மட்டும் பயன்படுத்தி இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு ஃபீல்டிங் சரியாக வராது என்பதால் தான் தோனியும் இம்பேக்ட் விதியை பயன்படுத்தி சிவம் துபேவை விளையாட செய்திருக்கிறார்.ஆனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இம்பேக்ட் விதி கிடையாது என்பதால் சிவம் துபே நிச்சயமாக ஃபீல்டிங் செய்து ஆக வேண்டும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கைக்கு வந்த கேச்சை தவற விட்டு சொதப்பியதால், சிவம் துபைவுக்கு ரோஹித் சர்மா பந்துவீச்சில் ஓவர் கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை இந்திய அணியில் சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.