தமிழன் என்பதால் தான் நடராஜன் புறக்கணிக்கப்பட்டார்… தேர்வு குழுவில் நடந்தது என்ன.? புட்டு புட்டு வைத்த பத்ரிநாத்..

0
Follow on Google News

பிசிசி தேர்வு குழு தமிழக கிரிக்கெட் வீரர்களிடம் பாரபட்சம் காட்டுவதாக முன்னால் வீரர் பத்ரிநாத் பகிர் கிளப்பும் தகவலை வெளியிட்டுள்ளார். எதிரில் வரும் ஜூன் மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள  வீரர்களின் பட்டியல் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது.  

நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு t20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், இந்த பட்டியல் வெளியாகி உள்ளது. ஆனால், பிசிசிஐ தேர்வு குழுவால் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியல் கிரிக்கெட் ரசிகர்களை முழுமையாக திருப்தி படுத்தவில்லை என்றே கூறலாம்.

ஏனெனில் இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன்,நடராஜன், அஸ்வின் என ஒரு தமிழக வீரர் கூட தேர்வு செய்யப்படவில்லை. குறிப்பாக சாய் சுதர்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 418 ரண்களை குவித்திருக்கிறார். அதேபோல் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரான தினேஷ் கார்த்திக் 8 லீக்  போட்டிகளில் கிடைத்த வாய்ப்பில் 262 ரன்கள் விளாசி இருக்கிறார்.

இந்த இரண்டு தமிழக வீரர்களும் ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் அதிரடி காட்டிக் கொண்டிருக்கையில், மற்றொரு பக்கம் நடராஜன் பவுலிங்கில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் நடராஜன், ஏழு போட்டிகளில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். 

அது மட்டும் இல்லாமல், இந்திய கிரிக்கெட் வீரர்களில் பும்ராவுக்கு  அடுத்ததாக சிறந்த எக்கனாமிக் ரேட்  நடராஜன் தான் வைத்திருக்கிறார். முன்னதாக 2021 ஆம் ஆண்டு t20 உலக கோப்பை தொடரிலேயே நடராஜனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரை தேர்வு செய்யவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நடராஜனின் அபாரமான ஆட்டத்தை பார்த்து வியந்த கிரிக்கெட் ரசிகர்கள், இந்த முறை நடராஜன் கண்டிப்பாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த முறையும் அவரை இந்திய அணியில் எடுக்கவில்லை.

இது குறித்து முன்னாள் வீரர் பத்ரிநாத் பேசுவையில், “இந்திய அணியில் நாலு ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டது ஏன்? இதுபோல பல கேள்விகளும் சந்தேகங்களும் உள்ளது. தமிழக வீரர்கள் இரண்டு மடங்கு சிறப்பாக விளையாடிய நிரூபித்தால் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்படும் என்று பாரபட்சம் காட்டுவது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வருகிறது. மற்ற மாநில வீரர்களுக்கு கிடைக்கும் ஆதரவு தமிழ்நாடு வீரர்களுக்கு கொஞ்சம் கூட கிடைப்பதில்லை. 

தேர்வு குழுவின் பாரபட்சத்தால் நானும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்ற முறையில் சொல்கிறேன். இது போன்ற சூழலில் நான் சிக்கி தவித்து இருக்கிறேன். இது பற்றி யாரும் பேசாத போது நான் பேச வேண்டியதாக உள்ளது. தமிழக வீரர்களில் ஒருவரான அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த போது ஒரு போட்டியில் சொதப்பியதும் கேள்வி கேட்கிறார்கள்.

இந்தியாவின் சிறந்த தொடக்க வீரர்களின் ஒருவரான முரளி விஜய், ரெண்டு இன்னிங்ஸில் மோசமாக விளையாடினால் அவருக்கு நான்கு பக்கங்களில் இருந்து கேள்விகள் எழுகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் தேர்வு குழுவில் இருக்கிறார்கள், ஆனால் அவர்களும் இது பற்றி கேள்வி எழுப்புவதில்லை. ஹர்ஷிதீப் சிங், கலீல் அஹ்மத் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது ஆனால் நடராஜன் போன்ற தமிழக வீரர்கள் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் பிடிக்கவில்லை” என்று தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். இவரைப்போலவே நடிகர் சரத்குமார், டி20 உலக கோப்பை தொடரில் தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்றும், தேர்வு குழுவினர் மறுபரிசீலனை செய்யலாம் என்றும் ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.